சிறுத்தை சிவா தம்பி; நடிகர் பாலாவுக்கு எளிமையாக நடந்த 4-வது திருமணம் - மணமகள் யார் தெரியுமா?

First Published | Oct 23, 2024, 12:04 PM IST

இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரனும், நடிகருமான பாலா நான்காவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bala 4th Marriage

மலையாள திரை உலகில், முன்னணி நடிகராக இருக்கும் பாலா தமிழில் 2003 ஆம் ஆண்டு வெளியான 'அன்பு' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, போன்ற படங்களில் நடித்தார். ஆனால் அன்பு படத்திற்கு பின்னர் இவர் நடிப்பில் வெளியான படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவிய நிலையில் 2006 ஆம் ஆண்டு 'கலாபம்' என்கிற மலையாள படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.
 

Siruthai Siva Brother

இவருக்கு தமிழை விட, மலையாளத்தில் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றன. மலையாளத்தில் பிஸியான நடிகராக மாறியதால், தமிழில் இருந்து விலகி முழுமையாக மலையாள திரை உலகில் கவனம் செலுத்தி வந்தார். மலையாள தொலைக்காட்சிகளில் நடக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பாலா நடுவராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் கடந்த 2010 ஆம் ஆண்டு, பிரபல பாடகி அம்ருதா சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் பாடகி என்பதை தாண்டி இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர், என பன்முக திறமை கொண்டவர். இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் அமிர்தா சுரேஷ், 18 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோவர்சை வைத்துள்ளார். அம்ரிதா சுரேஷுடன் ஒன்பது வருடத்தில் வாழ்க்கை நடத்திய பாலா பின்னர் 2019-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.

பெரிய தொகை; தமிழ் பட தாயாரிப்பாளரிடம் மோசடி செய்த இலியானா? பிரபலம் பகிர்ந்த பகீர் தகவல்!

Tap to resize

Bala Tie Knot With Relative

அம்ருதா உடனான விவாகரத்துக்கு பின்னர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, ரகசியமாக அவருடன் வாழ்க்கை நடத்தியதாக கூறப்படும் நிலையில், அந்த பெண் யார் என்பதை அறிவிப்பதற்கு முன்பே, 3 வருடங்கள் அவருடன் வாழ்த்து சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தார். இவர்களின் விவாகரத்தை நீதிமன்றம் அறிவித்து சில மாதங்களே ஆகும் நிலையில் தற்போது நான்காவது திருமண உறவில் இணைந்துள்ளார் பாலா.

இவர் தற்போது தன்னுடைய மாமா மகள் கோகிலா என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுடைய திருமணம் காலூர் பாகக்குளம் கோவிலில் மிகவும் எளிமையாக இன்று காலை நடந்து முடிந்துள்ளது. 
 

Malayalam Actor Bala Wedding Photos

திருமணத்திற்கு பின்னர், பாலா ஊடங்களிடம் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். “கோகிலா என் உறவினர், என் அம்மா எங்களுடன் இந்த மகிழ்ச்சியான தருணத்தை கொண்டாட இங்கே இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் அவருக்கு வயது 74 ஆகிறது. அவருக்கு உடல்நிலை சரியில்லை, ஆனால் அவர் உண்மையில் கலந்து கொள்ள விரும்பினார். கோகிலா தனது இளமை பருவத்தில் இருந்து கொண்டிருந்த கனவை இந்த திருமணம் நிறைவேற்றும் என நம்புகிறேன். கோகிலாவுக்கு மலையாளம் பேசத் தெரியாது என்றாலும், கடந்த ஒரு வருடமாக எனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் அவர் எனக்குப் பெரும் ஆதரவாக இருந்து வருகிறார் என தெரிவித்துள்ளார். 

விஜய் டிவி சீரியல் ஹீரோயினுக்கு திடீர் என நடந்த திருமண நிச்சயதார்த்தம்! குவியும் வாழ்த்து!

Bala Marriage Photos

மேலும் பாலாவின் நான்காவது திருமணம் குறித்த வீடியோஸ் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, பாலா தன்னுடைய முதல் மனைவி அம்ரிதா மற்றும் மகள் அவந்திகாவை பின் தொடர்ந்து தொந்தரவு செய்வதாக அமிர்தா சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில், அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அதே போல் அவந்திகா கடந்த மாதம், தன்னுடைய தந்தை தன் மீது பாசம் இருப்பதாக கூறுவதில் துளியும் உண்மை இல்லை. அவர் சிறுவயதில் தன்னை பட்டினி போட்டார். அம்மாவை அடித்து கொடுமைப்படுத்தினார் அந்த நினைவுகள் இப்போதும் என்னுடைய மனதில் உள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் இது குறித்து விளக்கம் மிகவும் உருக்கமாக விளக்கம் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!