அதிக நாட்கள் ஓடிய சூப்பர் ஹிட் சீரியலை திடீரென முடிவுக்கு கொண்டு வரும் சன் டிவி!

First Published | Oct 23, 2024, 11:57 AM IST

Sun TV Serial Ended : சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் ஹிட் சீரியல் ஒன்று விரைவில் முடிவுக்கு வர உள்ளது. அதன் கிளைமாக்ஸ் ஷூட்டிங்கும் நடத்தி முடித்துள்ளதாக கூறப்படுகிறது.

Sun TV Serial

சீரியல்கள் என்றாலே தெறித்தோடும் காலம் போய், சிறிசுகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிப் பார்க்கும் அளவுக்கு தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் விறுவிறுப்பான திரைக்கதையோடு இருக்கின்றன. இதன் எதிரொலியாக முன்பெல்லாம் வாரத்தின் 5 நாட்கள் மட்டும் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களை தற்போது வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பும் அளவுக்கு சீரியல்களுக்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

sundari serial

அந்த வகையில் சன் டிவி தான் தற்போது சீரியல்களில் நம்பர் 1 ஆக இருந்து வருகிறது. சன் டிவி சீரியல்கள் தான் டிஆர்பியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. குறிப்பாக அதில் ஒளிபரப்பாகும் கயல், சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, மருமகள், சுந்தரி ஆகிய சீரியல்கள் தான் அதிக டிஆர்பியை பெற்று டாப் 5 இடங்களை பிடித்து வருகின்றன. இப்படி டிஆர்பியில் சக்கைப்போடு போடும் சூப்பர் ஹிட் சீரியல் ஒன்றை விரைவில் முடிவுக்கு கொண்டு வருகிறது சன் டிவி.

இதையும் படியுங்கள்... சுந்தரி சீரியல் நடிகை ஸ்ரீகோபிகாவுக்கு திருமணம் நடந்து முடிந்தது! மாப்பிள்ளை யார் தெரியுமா?

Tap to resize

sundari serial Ended

அது வேறெதுவுமில்லை... சன் டிவியில் கேப்ரியல்லா நடிப்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த சுந்தரி சீரியலை தான் விரைவில் முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாம் சன் டிவி. சுந்தரி சீரியல் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சீரியலின் முதல் சீசன் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ஒளிபரப்பானது. அதில் கிராமத்துப் பெண்ணான கேப்ரியல்லா, பல தடைகளை கடந்து அவரது ஐஏஎஸ் கனவை நோக்கி எப்படி பயணிக்கிறார் என்பதை காட்டி இருந்தனர்.

Sun TV sundari serial

முதல் சீசன் முடிவடைந்த இரு தினங்களிலேயே அதன் இரண்டாவது சீசனை தொடங்கினர். அதில் 7 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் சுந்தரி ஐஏஎஸ் ஆன பின்னர் என்னென்ன சவால்களை சந்திக்கிறார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதை உடன் நகர்த்து வந்தனர். இந்த நிலையில், சுந்தரி சீரியலில் இரண்டாவது சீசன் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அந்த சீரியலின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டதாம். தற்போது ஒளிபரப்பாகி வரும் சன் டிவி சீரியல்களில் அதிக நாட்கள் ஓடிய சீரியல் என்றால் அது சுந்தரி தான்.

இதையும் படியுங்கள்... டாப் 10 TRP-யில் விஜய் டிவி தொடர்களை பந்தாடிய சன் டிவி! புதிய சீரியலால் சறுக்கிய 'சிங்கப்பெண்'!

Latest Videos

click me!