Kalyani Priyadarshan Wedding Video : மாநாடு படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை கல்யாணி பிரியதர்ஷன் திருமண கோலத்தில் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பிரியதர்ஷன். இவர் நடிகை லிசியை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு மகளாக பிறந்தவர் தான் கல்யாணி பிரியதர்ஷன். இவர் தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக மாநாடு படத்தில் நடித்திருந்தார். இதுதவிர ஹீரோ படத்திலும் சிவகார்த்திகேயனுடன் நடித்திருந்தார். இவருடைய திருமணம் பற்றிய பேச்சு தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
24
Kalyani Priyadarshan, sreeram ramachandran
கல்யாணி பிரியதர்ஷனும், மலையாள சீரியல் நடிகர் ஸ்ரீராம் ராமச்சந்திரனும் மணக்கோலத்தில் மாலையை மாற்றிக் கொண்ட வீடியோ இணையத்தில் படு வைரல் ஆனது. இதைப்பார்த்த ரசிகர்கள் குழம்பிப் போயினர். ஏனெனில் ஸ்ரீராம் ராமச்சந்திரன் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவருக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. அப்படி இருக்கையில் அவரை ஏன் கல்யாணி திருமணம் செய்துகொண்டார் என்கிற குழப்பம் நிலவி வந்தது.
அந்தக் குழப்பத்துக்கு தற்போது விடை கிடைத்து இருக்கிறது. கல்யாணி பிரியதர்ஷனும் ஸ்ரீராம் ராமச்சந்திரனும் மணக்கோலத்தில் இருக்கும் வீடியோ அவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த விளம்பர பட ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்டதாம். அதை தான் அனைவரும் அது உண்மையிலேயே நடைபெற்ற திருமணம் என நம்பிவிட்டனர். இதில் ஹைலைட் என்னவென்றால் இந்த வீடியோவை பார்த்த பலரும் கல்யாணிக்கு திருமண வாழ்த்துக்களை கூறி வந்தனர்.
44
Kalyani Priyadarshan Ad shoot
இத்தனை குழப்பத்திற்கும் காரணம் நடிகர் ஸ்ரீராம் ராமச்சந்திரன் தான். அவர் தான் இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதனால் தான் ரசிகர்கள் சற்று குழம்பிப்போயினர். கல்யாணி பிரியதர்ஷன் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடிப்பில் ஜீனி என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.