யுவனை டீலில் விட்ட சிம்பு; STR 49 படத்துக்காக மீண்டும் இணையும் வில்லங்கமான கூட்டணி!

Published : Oct 23, 2024, 07:32 AM IST

STR 49 movie Music Director : அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ள STR 49 திரைப்படத்திற்கு இசையமைக்கப்போவது யார் என்கிற அப்டேட் வெளியாகி உள்ளது.

PREV
14
யுவனை டீலில் விட்ட சிம்பு; STR 49 படத்துக்காக மீண்டும் இணையும் வில்லங்கமான கூட்டணி!
Simbu, Aswath Marimuthu

தமிழ் சினிமாவில் வலம் வரும் மாஸ் நடிகர்களில் ஒருவரான சிம்பு, தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அவர் நடிப்பில் தற்போது தக் லைஃப் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மணிரத்னம் இயக்குகிறார். இப்படத்தில் சிம்பு உடன் கமல்ஹாசன், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

24
Simbu New Movie

தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர சிம்பு கைவசம் எஸ்.டி.ஆர்.48 திரைப்படமும் உள்ளது. இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக இது உருவாக உள்ளது. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதன் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... வின்டேஜ் சிம்பு ரிட்டன் வண்டாரு; GOAT பட பிரபலத்துடன் இணையும் STR - வெளியான சூப்பர் அப்டேட்!

34
STR 49 Movie

எஸ்.டி.ஆர் 48 படத்துக்கு முன்னதாகவே எஸ்.டி.ஆர் 49 படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளிவந்தது. இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ஓ மை கடவுளே என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கியவர் ஆவார். அஸ்வத் மாரிமுத்து - சிம்பு கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தை விஜய்யின் கோட் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

44
Anirudh

மேலும் எஸ்.டி.ஆர் 49 படத்தில் விண்டேஜ் சிம்புவை பார்க்கலாம் என்றும் கூறி உள்ளதால் இப்படம் சிம்பு ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என கூறப்படுகிறது. விண்டேஜ் சிம்புவுக்கு பல வெற்றிப்பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் என்றால் அது யுவன் சங்கர் ராஜா தான். ஆனால் எஸ்.டி.ஆர் 49 படத்துக்கு யுவனை டீலில் விட முடிவெடுத்துள்ள சிம்பு, முதன்முறையாக அனிருத் உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. ஏற்கனவே இவர்கள் காம்போவில் வெளிவந்த பீப் சாங் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த வில்லங்க கூட்டணி மீண்டும் இணைவதால் என்ன சம்பவம் பண்ண போகிறார்களோ என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்... பாலிவுட்டே மிரண்டுபோயிருக்கு! மிரட்டிவிட்ட தென்னகத்தின் டாப் 10 நட்சத்திரங்கள்!

Read more Photos on
click me!

Recommended Stories