பெரிய தொகை; தமிழ் பட தாயாரிப்பாளரிடம் மோசடி செய்த இலியானா? பிரபலம் பகிர்ந்த பகீர் தகவல்!

First Published | Oct 22, 2024, 9:08 PM IST

தமிழ் பட தயாரிப்பாளர் ஒருவரிடம், படம் நடிக்க பெருந்தொகை வாங்கிக்கொண்டு... இலியானா மோசடி செய்ததாக பிரபலம் ஒருவர் கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Ileana D'Cruz

'கேடி' திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் இலியானா. முதல் படமே படு தோல்வி அடைந்ததால், சைலண்டாக தெலுங்கு திரையுலகின் பக்கம் சென்றார். அங்கு அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது. அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர், ராம் சரண், போன்ற பல பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்தார் இலியானா.

Ileana D'Cruz Movies

தெலுங்கில் ஒரு கட்டத்தில் படு பிஸியான நாயகியாக வலம் வந்த இலியானா, பின்னர் அதிரடியாக சரிவை சந்திக்க துவங்கினார். கோலிவுட்டில் 'நண்பன்' பட வெற்றிக்கு பின்னர் இவருக்கு கிடைத்த வாய்ப்புகளை தொடர்ந்து, இலியானா உதாசீன படுத்தியதால் தமிழ் பட வாய்ப்புகளும் கிடைக்காமல் போனதாக கூறப்படுகிறது. 
 

Tap to resize

Ileana D'Cruz Tamil movies

தெலுங்கில் சிறிய படங்களில் நடிக்க தயக்கம் காட்டிய இலியானாவுக்கு... தமிழில் இயக்குனர் ஒருவர் கூறிய கதை பிடித்து போகவே, தயாரிப்பாளரிடம் கை நீட்டி சுமார் 40 லட்சம் படம் பெற்றார். அந்த சமயத்தில் சில பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால், தமிழ் பட தயாரிப்பாளரிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல், ஆட்டம் காட்டியதாக இலியானா அந்த பணத்தை மோசடி செய்துள்ளார்.

குற்ற உணர்ச்சி; கண்கலங்கிய வைரமுத்து! ஜானகி வாழ்க்கையை திருப்பி போட்டதா? இந்த ஒற்றை வார்த்தை!
 

Ileana D'Cruz Cheating

பின்னர் இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், அவருக்கு தமிழில் நடிக்க தடை விதித்ததாகவும், இதன் காரணமாகவே இலியானா தென்னிந்திய திரையுலகை விட்டு ஒரேயடியாக விலகி, பாலிவுட் படங்களில் கவனம் செலுத்துவதாக... சமீபத்தில், மூத்த தயாரிப்பாளர் காந்தரகட்ட பிரசாத், இலியானா தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுளளார். இந்த தகவல் தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவி சீரியல் ஹீரோயினுக்கு திடீர் என நடந்த திருமண நிச்சயதார்த்தம்! குவியும் வாழ்த்து!
 

Latest Videos

click me!