யாரு நம்ம சிவகார்த்திகேயன் பொண்ணா இது? என்னமா வளந்துட்டாங்க! கியூட் பர்த்டே கிளிக்ஸ்!

Aaradhana Sivakarthikeyan : பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா இன்று தனது 11வது பிறந்தநாளை இன்று கொண்டாடியுள்ளார்.

Actor Sivakarthikeyan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக முழுமையாக மாறி இருக்கிறார் சிவகார்த்திகேயன் என்றால் அது எந்த வகையிலும் மிகையல்ல. அடுத்த தளபதி யார் என்கின்ற கேள்வி எழும்பொழுதெல்லாம், சிவகார்த்திகேயனின் பெயர் அவருடைய ரசிகர்களால் உரக்க சொல்லப்படுவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கிடையில் அண்மையில் வெளியான கோட் திரைப்படத்தில் வெளியான காட்சிகள், இப்பொது Sivakarthikeyan ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. என்ன இருந்தாலும் தளபதி, தளபதி தான். சிவகார்த்திகேயன் நிச்சயமாக சிறந்த நடிகராக வளர்ந்து வருவார் என்பது தான் விஜயுடைய ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

மாநாட்டிற்கு முன் விஜய்க்கு வந்த அதிர்ச்சி செய்தி.! தாங்க முடியாமல் கதறி அழுத புஸ்ஸி ஆனந்த்

Aarthi

சின்னத்திரையில் இருந்து தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று வெள்ளித் திரையில் மின்னி வரும் சிவகார்த்திகேயன் தன்னுடைய திரைப்படங்களை கவனித்துக் கொள்ளும் அதே நேரம் தன்னுடைய குடும்பத்தையும் மிகச் சிறப்பாக கவனித்து வருகிறார். அண்மையில் அவருக்கு மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்ததும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இன்று அவருடைய மூத்த மகள் ஆராதனாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு இருக்கிறது. அந்த நிகழ்ச்சி சம்பந்தமான சில புகைப்படங்களும் தற்பொழுது வெளியாகி உள்ளது.


Aarthi sivakarthikeyan

கடந்த 2018ம் ஆண்டு பிரபல இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் "கனா". இந்த திரைப்படத்தை தன்னுடைய நண்பன் அருண் ராஜாவிற்காக சிவகார்த்திகேயனே தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார். அது மட்டும் அல்லாமல் இந்த திரைப்படத்தின் மூலம் பாடகியாக தமிழ் திரை உலகில் களமங்கியவர் தான் ஆராதனா. அவருக்கு அப்போது ஐந்து வயது என்பது குறிப்பிடத்தக்கது.

Aaradhana

இந்த நிலையில் இன்று தனது பதினோராவது பிறந்த நாளை கொண்டாடும் ஆராதனா சிவகார்த்திகேயன் தனது அன்னையோடு இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர். ஆர்த்தி சிவகார்த்திகேயன் தான், தனது மகளோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அசத்தியுள்ளார்.

ஜானகி முன் குற்ற உணர்ச்சியால் கலங்கி நின்ற வைரமுத்து! வாழ்க்கையை திருப்பி போட்டதா இந்த பாடலில் ஒற்றை வார்த்தை?

Latest Videos

click me!