நடிகை சாவித்ரி சினிமா உச்ச நட்சத்திரமாக இருந்தபோது கோடி கோடியாய் சம்பாதித்தது மட்டுமின்றி அந்த பணத்தில் அதிக தான தர்மங்களை செய்து வந்தார். குறிப்பாக போர் நடைபெற்ற சமயத்தில் ஏராளமான உதவிகளை செய்திருக்கிறார் சாவித்ரி. நிதி திரட்டுவதற்காக ஜெமினி கணேசன் உடன் சேர்ந்து சாவித்ரி போட்ட நாடகம் மூலம் 12 லட்சம் வருவாய் கிடைத்தது. அந்த பணத்தை பெற்றுக்கொள்ள அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியே நேரில் வந்தார். அப்போது தான் அணிந்திருந்த ஆபரணங்களையும் தானமாக கொடுத்தார் சாவித்ரி.
24
Actress Savitri
இதேபோல் 1965-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் ஏ.எல்.ஸ்ரீனிவாசன் தலைமையில் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன், சாவித்ரி, ஜெயலலிதா, சந்திரபாபு என தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அணிதிரண்டு போரில் காயமடைந்த வீரர்களுக்கு ஆறுதல் சொல்ல டெல்லியில் குவிந்தார்கள். சிப்பாய்களுக்கு மத்தியில் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. அதில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக சிவாஜி - சாவித்ரி இணைந்து நடத்திய சத்யவான் தெருக்கூத்து இருந்தது.
இதுதவிர பத்மினி, சந்திரபாபு, ராஜ சுலோச்சனா பங்கேற்ற பாங்கிரா நடனம், ஜெயலலிதாவின் நாட்டியம் ஆகியவையும் ஹைலைட்டாக இருந்தது/ இதையடுத்து அந்த ஆண்டு அக்டோபர் 27-ந் தேதி ஜலந்தரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சென்ற சாவித்ரி, அங்கு விழுப்புரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரின் செயலால் சாவித்ரி கண்கலங்கிப்போனாராம். போரில் என் கைகளை இழந்துவிட்டேன், அதனால் என் தலையால் உங்களை வணங்குகிறேன் என்று அந்த இளைஞர் சொன்னதைக் கேட்டு கண்கலங்கிய சாவித்ரி, அவரை கட்டிப்பிடித்து அழுததோடு, நீ தாண்டா என் தம்பி என்று சொல்லி தன் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அந்த இளைஞர் கழுத்தில் போட்டு விட்டிருக்கிறார் சாவித்ரி.
44
Savitri beat MGR in Auction
இப்படி அந்த காலத்தில் நடந்த ஒவ்வொரு போரிலும் சாவித்ரியின் பங்களிப்பு தொடர்ந்துகொண்டே இருந்தது. ஒருமுறை வங்காள தேச நிதிக்காக மான் குட்டி ஒன்றை ஐதராபாத்தில் ஏலம் விட்டிருக்கிறார்கள். அதில் சாவித்ரி தான் வெற்றிபெற்றார். அவர் வென்றது யாரை தெரியுமா... புரட்சித் தலைவர் எம்ஜிஆரை தான். அந்த ஏலத்தில் எம்ஜிஆரை விட அதிக தொகைக்கு அதாவது 32 ஆயிரத்திற்கு அந்த மான் குட்டியை ஏலம் எடுத்திருக்கிறார் சாவித்ரி. அந்த ஏலப்பணம் அப்படியே வங்காள தேச அகதிகளுக்கு போய் சேர்ந்தது. இப்படி ஏராளமான தான தர்மம் செய்திருந்தாலும் அதில் ஒன்று கூட கருணை உருவாக மாறி அவரது இறுதி நாட்களில் அவரை காப்பாற்றவில்லை.