தென்னிந்திய திரையுலகில் முன்னணி பாடகராக இருக்கும் யேசுதாஸின், இரண்டாவது மகன் விஜய் யேசுதாஸ் வீட்டில் தான் தற்போது நகைகள் திருடப்பட்டுள்ளது. சென்னை அபிராமபுரத்தில் உள்ள, பாடகர் விஜய் ஜேசுதாசின் வீட்டில் இருந்து சுமார் 60 சவரன் நகைகள் கடந்த டிசம்பர் மாதம் திருடப்பட்டதாகவும், இது பிப்ரவரி இறுதியில்தான் இது தெரியவந்ததாகவும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக இசை பாடகரான விஜய் யேசுதாஸ், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உள்ளிட்ட மொழிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் பின்னணி பாடகராக பணியாற்றி பிரபலமானவர். கடந்த 2000 ஆம் ஆண்டு, மலையாளத்தில் வெளியான 'மில்லியன் ஸ்டார்ஸ்' படத்தின் மூலம் பாடகராக தன்னுடைய தன்னுடைய பயணத்தை துவங்கிய இவர், இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் பாடகராக பணியாற்றினார்.
தமிழில் 2001 ஆம் ஆண்டு, இயக்குனர் சித்திக் இயக்கத்தில் வெளியான 'பிரெண்ட்ஸ்' படத்தில் ருக்கு ருக்கு ரூம்புஜா பாடலை பாடியிருந்தார். இதை தொடர்ந்து, ஜெயம், ஜூலி கணபதி, அரசு, காதல் கொண்டேன், சண்டை கோழி, ராம், கள்வனின் காதலி, சென்னை 600028, என பல படங்களில் பணியாற்றி உள்ளார். பாடகர் என்பதை தாண்டி, மலையாளத்தில் அவன் என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஜய் ஜேசுதாஸ், பின்னர் தமிழில் 'மாரி' படத்தில் தனுசுக்கு வில்லனாக நடித்தார். இதை தொடர்ந்து, இவர் ஹீரோவாக நடித்த 'படைவீரன்' படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார்.
Viduthalai: திரையரங்கங்களில் சிறகடித்து பறக்கிறதா... சிறகொடிந்து கிடக்கிறதா 'விடுதலை'! ரசிகர்களின் விமர்சனம்!
தற்போது வெற்றிகரமாக பாடகர் நடிகர் என இரு குதிரையில் சவாரி செய்து வரும் விஜய் யேசுதாசுக்கு சொந்தமாக சென்னை அபிராமி புறத்தில் ஒரு வீடு உள்ளது. இவருடைய மகள் சென்னையில் படித்து வரும் நிலையில், அவருக்கு விடுமுறை என்றால், கேரளாவுக்கு சென்று விடுவார்கள் என கூறப்படுகிறது. எனவே, விஜய் யேசுதாஸின் சென்னை வீட்டில் சில நகைகள் இருந்து வந்த நிலையில்... இதில் சுமார் 60 சவரன் திருடப்பட்டுள்ளதை கடந்த மாத இறுதியில் கண்டுபிடித்திருந்தாலும், இவர்கள் கொடுத்த புகார் குறித்து தற்போது தான் தகவல் வெளியாகியுள்ளது.