அயோத்தி
சசிகுமார் நடிப்பில் கடந்த மார்ச் 3-ந் தேதி பெரியளவில் விளம்பரமே இல்லாமல் திரையரங்கில் ரிலீஸ் ஆன படம் தான் அயோத்தி. இதையடுத்து ரசிகர்களை கவரும் வகையில் படம் அமைந்திருந்ததால், அடுத்தடுத்த வாரங்களில் அதிக திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டு பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படம் இன்று (மார்ச் 31) ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தை மந்திரமூர்த்தி இயக்கி உள்ளார்.