முதல் நாளே இத்தனை கோடி வசூலா? 'தசரா' படத்தின் தரமான சம்பவம்..! சந்தோஷத்தில் படக்குழு..!

Published : Mar 31, 2023, 01:04 PM IST

நடிகர் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான தசரா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.  

PREV
15
முதல் நாளே இத்தனை கோடி வசூலா? 'தசரா' படத்தின் தரமான சம்பவம்..! சந்தோஷத்தில் படக்குழு..!

சமீப காலமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் எடுக்கப்படும் படங்கள் 'பான்' இந்தியா திரைப்படங்களாக வெளியாகி, அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், RRR, புஷ்பா போன்ற சூப்பர் ஹிட் படங்களை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, உள்ளிட்ட 5 மொழிகளில் நேற்று வெளியான திரைப்படம், 'தசரா'.
 

25

இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில், நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி உள்ள 'தசரா' திரைப்படத்தின், முதல் நாள் வசூல் குறித்த விபரம் வெளியாகி அனைவரையுமே ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

Viduthalai: திரையரங்கங்களில் சிறகடித்து பறக்கிறதா... சிறகொடிந்து கிடக்கிறதா 'விடுதலை'! ரசிகர்களின் விமர்சனம்!
 

35

நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் பழி வாங்கப்படும் படலத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் தசரா திரைப்படம், நேற்று மிகபெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. இந்த படத்தில், நேனு லோக்கல் படத்தின், வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக கீர்த்தி சுரேஷ், நானிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
 

45

ஏற்கனவே இந்த படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இப்படம் நேற்று வெளியானது முதலே தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்தது. மேலும் முதல் நாளில் மட்டும் இந்தியாவில் சுமார் 38 கோடி வசூல் சாதனை செய்துள்ளதாக, திரைப்பட வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மகள் வயது நடிகையை மடக்கி போட்ட டாப் ஹீரோ! ரகசிய உறவுக்கு இதுவே ஆதாரம்? புட்டு புட்டு வைத்த பயில்வான் ரங்கநாதன்
 

55

மேலும் நானி கேரியரில், தசரா திரைப்படம் மிகவும் பெஸ்ட் ஓப்பனிங்காக அமைந்த திரைப்படம் என்று, ரசிகர்கள் கூறி வருகின்றனர்.  அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் இப்படத்தின் வசூல் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய தினமே இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை கொண்டாடும் வகையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் நானி கேக் வெட்டி படத்தின் வெற்றியை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories