Pathu Thala Box office:'பத்து தல'-யாக வந்த சிம்பு முதல் நாள் கலெக்ஷனில் ஜெயித்தாரா? பாக்ஸ் ஆபீஸ் விவரம் இதோ..

Published : Mar 31, 2023, 10:19 AM IST

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான 'பத்து தல' படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் தற்போது வெளியாகி, இப்படம் வெற்றியா அல்லது தோல்வியா என்பதை நிர்ணயித்துள்ளது.  

PREV
17
 Pathu Thala Box office:'பத்து தல'-யாக வந்த சிம்பு முதல் நாள் கலெக்ஷனில் ஜெயித்தாரா? பாக்ஸ் ஆபீஸ் விவரம் இதோ..

கன்னட திரையுலகில், சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடிப்பில் வெளியான முஃட்டி படத்தின் தமிழ் ரீமேக்காக எடுக்கப்பட்ட 'பத்து தல' திரைப்படம் நேற்று வெளியான நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

27

நடிகர் சிம்பு இதுவரை நடித்திராத மிகவும் மெச்சூர்டான கேங் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'. மேலும் இப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கெளதம் மேனன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருந்தது. இந்த படத்தை சூர்யா - ஜோதிகாவை வைத்து 'சில்லுனு ஒரு காதல்' படத்தை இயக்கிய, பிரபல இயக்குனர் ஒப்பிலி என் கிருஷ்ணன் இயக்கியிருந்தார்.
மகள் வயது நடிகையை மடக்கி போட்ட டாப் ஹீரோ! ரகசிய உறவுக்கு இதுவே ஆதாரம்? புட்டு புட்டு வைத்த பயில்வான் ரங்கநாதன்

37

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், பிரம்மாண்டமாக வெளியான இப்படம்... தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் அனைவருமே சிம்பு அதிரடி கேங் ஸ்டார் கதாபாத்திரத்தில். மிகவும் கிளாஸான  நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாக தெரிவித்து வந்தனர். 
 

47

அதேபோல் மிகவும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் படம் உருவாகியுள்ளதாகவும். அனைவருமே தங்களுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி, படத்தின் வெற்றிக்கு வழி வகுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

IPL 2023: பிரமாண்ட துவங்க விழாவை நடனத்தால் களைகட்ட வைக்க போகும் தமன்னா - ராஷ்மிகா!
 

57

இப்படி தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த 'பத்து தல' திரைப்படம், முதல் நாள்... தமிழகத்தில் மட்டும், சுமார் ஏழு கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால், வசூல் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் திரையரங்கு உரிமையாளர்கள்.
 

67

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான 'மாநாடு மற்றும் 'வெந்து தணிந்தது காடு' என இரு படங்களுமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது போல, இப்படமும் வெற்றி படங்களின் லிஸ்டில் இணைந்துள்ளதாக கூறி சிம்புவின் ஹர்டிக் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள் சிம்பு ரசிகர்கள்.

பால் வண்ண மேனியை காட்டி பக்குனு ஆக்கிய வாணி போஜன்! கிக் ஏறிப்போய் வர்ணிக்க வார்த்தை தேடும் ரசிகர்கள்!
 

77

அதேபோல் பல வருடங்களாக ஒரு வெற்றி படத்தை கொடுக்க போராடி வந்த கௌதம் கார்த்திக்கிற்கு, இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததோடு... வெற்றி படமாகவும் உள்ளதாக ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இப்படத்தின் மூலம் கெளதம் கார்த்திக்கின் வித்தியாசமான நடிப்பை பார்க்க முடிந்ததாகவும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Read more Photos on
click me!

Recommended Stories