சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையில் சரி... உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்டு மிகவும் சந்தோஷமாக தங்களின் வாழ்க்கையை துவங்கும் பிரபலங்கள், அனைவரும் கடைசி வரை ஒன்றாகவே வாழ்க்கை என்னும் படகில் பயணிக்கிறார்களா? என்றால் அது சந்தேகமே.
அந்த வங்கியில் பிரிவோம் சந்திப்போம் என்ற முதல் சீரியலில் ஒன்றாக நடித்ததன் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் ரக்ஷிதா மற்றும் தினேஷ். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து, ரக்ஷிதா மற்றும் தினேஷ் இருவருமே திரையுலகில் கவனம் செலுத்தி வந்த நிலையில், திடீர் என ஏற்பட்ட கருத்து வேறுபாடு இவர்கள் இருவரும் பிரிந்து வாழும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டது.
மேலும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக பார்க்கப்பட்ட ரக்ஷிதாவுக்கு, தொடர்ந்து தன்னுடைய முழு ஆதரவையும் கொடுத்து கொடுத்து வந்தார். ரக்ஷிதாவிடம் கொஞ்சம் எல்லை மீறி நடந்து கொண்ட, ராபர்ட் மாஸ்டருக்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்தது மட்டும் இன்றி, அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என கோவத்தை வெளிப்படுத்தினார்.
ரக்ஷிதாவுடன் சேர பண்ணுனதெல்லாம் பாழா போனதால்... தற்போது விவாகரத்து முடிவை கையில் எடுத்துள்ளதாகவும், இது குறித்து வழக்கறிஞர்களை சந்தித்து பேசி வருவதாகவும் ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ரக்ஷிதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வெள்ளித்திரை வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், தினேஷ் 'ஈரமான ரோஜா 2 ' மற்றும் 'கார்த்திகை தீபம்' ஆகிய சேரியல்க்ளில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.