பல நடிகைகள் திருமணம் ஆன வேகத்தில், திரையுலகை விட்டே... காணாமல் போகும் நிலையில், திருமணம் ஆகி, குழந்தை பெற்றுக்கொண்ட பிறகும், தமிழ் திரையுலகில் தொடர்ந்து கதாநாயகியாகவே நடித்து வருகிறார் காஜல் அகர்வால்.
திருமணம் ஆவதற்கு முன்பே காஜல் அகர்வால் இப்படத்தின் நடிக்க கமிட் ஆன நிலையில், இப்போது தான் இப்படம் இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கி வருகிறது.
விரைவில் இந்த படம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்ததாக பாலகிருஷ்ணா, வீர சிம்ஹா ரெட்டி படத்தின் வெற்றிக்கு பிறகு நடிக்க உள்ள, படத்தில் காஜல் அகர்வால் தான் நாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் கூட காஜல் அகர்வால் பாலகிருஷ்ணாவுடன், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தபடி... எடுத்து வெளியிட்ட புகைப்படம் படு வைரலாக பார்க்கப்பட்டது.
இதில் கருப்பு, வெள்ளை, மாறும் பச்சை நிற பேன்ட் மற்றும் கிராப் டாப் அணிந்து... தன்னுடைய கூர்மையான விழிகளால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் வகையில், போஸ் கொடுத்துள்ளார்.