கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்கிற பாடல் தான் சின்மயி பாடிய முதல் பாடலாகும். இதையடுத்து டி.இமான், தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா, ஜிவி பிரகாஷ் என தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்கள் அனைவருடன் பணியாற்றி புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆனார் சின்மயி.