anikha surendran
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்திரன். இவரை தமிழுக்கு கொண்டு வந்தது கவுதம் மேனன் தான். அவர் இயக்கிய என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்திருந்தார் அனிகா. அப்படத்தில் அனிகாவின் நடிப்புக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டுக்கள் கிடைத்ததோடு, அவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகளும் குவிந்தன.
anikha surendran
எப்படா 18 வயது ஆகும் என்று காத்திருந்த அனிகா, 18 வயது ஆனதும் சட்டென கவர்ச்சி ரூட்டுக்கு தாவினார். இனி குழந்தை வேடத்தில் நடிக்கப்போவதில்லை என முடிவெடுத்த அனிகா, நடிச்சா ஹீரோயின் தான் என இருந்தார். இந்த வேளையில், அவருக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகளும் கிடைத்தன. அதன்படி இந்த ஆண்டு அவர் ஹீரோயினாக நடித்த புட்ட பொம்மா மற்றும் ஓ மை டார்லிங் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தன.