தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே... சினிமா பிரபலங்களின் தந்தையர் தின ஸ்பெஷல் கிளிக்ஸ் இதோ

Published : Jun 18, 2023, 11:30 PM IST

தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தங்களது தந்தையுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

PREV
111
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே... சினிமா பிரபலங்களின் தந்தையர் தின ஸ்பெஷல் கிளிக்ஸ் இதோ

தந்தையர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலரும் தங்களது தந்தையை பற்றியும், அவர்களுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டும் தந்தை மீதான அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சினிமா பிரபலங்களும் தந்தையர் தினத்தையொட்டி தங்களது தந்தையுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

211
விக்னேஷ் சிவன்

இயக்குனர் விக்னேஷ் சிவன் முதன்முறையாக தந்தையர் தினத்தை கொண்டாடி உள்ளார். அவருக்கும் நடிகை நயன்தாராவுக்கும் கடந்த ஆண்டு தான் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. தனது மகன்களான உயிர் மற்றும் உலகத்தை கையில் ஏந்தியபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு விக்கி, வாழ்க்கை அழகானது, அனைவருக்கு இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

311
அல்லு அர்ஜுன்

புஷ்பா பட ஹீரோ அல்லு அர்ஜுன், அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள். உலகின் சிறந்த தந்தைக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டு தன் தந்தை அல்லு அரவிந்த் உடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் அல்லு அர்ஜுன்.

411
கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ், சிறு வயதில் தன் தந்தையுடன் எடுத்த அழகிய புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு, இந்த அழகிய தருணங்களை மிகவும் மிஸ் பண்ணுவதாகவும், மீண்டும் இதுபோன்ற தருணங்களை மறு உருவாக்கம் செய்ய ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

511
அனுஷ்கா

நடிகை அனுஷ்கா ஷெட்டி, தனது தந்தையுடன் எடுத்த கியூட்டான செல்பி புகைப்படத்தை பதிவிட்டு ஹார்ட்டின் எமோஜியுடன் தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... Father's Day 2023 : தந்தையர் தின வரலாறும் அதன் முக்கியத்துவமும்!

611
அட்லீ

இயக்குனர் அட்லீயும் இந்த ஆண்டு தான் தனது முதல் தந்தையர் தினத்தை கொண்டாடி உள்ளார். அவருக்கும் அவரது மனைவி பிரியாவுக்கும் கடந்த ஜனவரி மாதம் தான் மீர் என்கிற ஆண்குழந்தை பிறந்தது. அட்லீ குழந்தையுடன் ஜாலியாக விளையாடும்போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இந்த உலகத்திலேயே நீ தான் சிறந்த தந்தை என பிரியா குறிப்பிட்டுள்ளார்.

711
மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனன் தனது தந்தையுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு தந்தையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தில் லைட்டிங், ஆங்கிள், பின்னணி ஆகியவை சரியாக இல்லாவிட்டாலும், அன்பும் புன்னகையும் நிறைந்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

811
சினேகா

நடிகை சினேகா தனது தந்தை தனக்கு முத்தமிடும் அழகிய புகைப்படத்தையும், பிரசன்னா தனது குழந்தைகளுடன் போஸ் கொடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டு தந்தையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

911
வரலட்சுமி சரத்குமார்

நடிகை வரலட்சுமி தனது தந்தை சரத்குமாரை கட்டியணைத்தபடி எடுத்த கேண்டிட் புகைப்படத்தை பதிவிட்டு தந்தையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். வயது வெறும் நம்பர் தான் என்பதை நிரூபித்துள்ள என்னுடைய ரியல் லைப் ஹீரோவான என் தந்தைக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

1011
காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் தனது கணவரும், மகனும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, நீலுடைய பேவரைட் மட்டுமல்ல என்னுடைய பேவரைட்டும் கவுதம் தான். அவருக்கு இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

1111
ரோபோ சங்கர்

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, தனது தந்தையுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, இந்த தந்தையர் தினம் எனக்கு ஸ்பெஷல் ஆனது, ஏனெனில் என் தந்தை மீண்டும் அதே வலிமையோடு வந்துவிட்டார் என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... Father's day special songs: தந்தையர் தினத்தில் உங்க அப்பாவுக்காக இந்த பாடல்களை ஸ்டேட்டஸ் வைங்க!!

Read more Photos on
click me!

Recommended Stories