தமிழ் சினிமாவில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டால் அது எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் சரி, அவர்களின் கெரியர் குளோஸ் ஆகிவிடும் என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு முன் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டதால் அவர் சில ஆண்டுகள் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்த சம்பவத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது மீண்டும் நடக்கப்போவதாக கூறப்படுகிறது.
simbu, sj suryah
தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு சென்னையில் நடைபெற்றது. அதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பெற்றுக்கொண்டு கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கும் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கவும் முடிவெடுத்துள்ளார்களாம். அவர்களிடம் உள்ள புகார் பட்டியலில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, விஷால் மற்றும் யோகிபாபு ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே... சினிமா பிரபலங்களின் தந்தையர் தின ஸ்பெஷல் கிளிக்ஸ் இதோ
Yogibabu
இதில் நடிகர் சிம்பு மீது ஐசரி கணேஷ் புகார் அளித்துள்ளார். அதேபோல் நடிகர் எஸ்.ஜே.சூர்யா மீது ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜாவும், விஷால் மீது கே.பி.பிலிம்ஸ் பாலுவும், அதர்வா மீது தயாரிப்பாளர் மதியழகனும் புகார் அளித்துள்ளார்களாம். இதுதவிர தமிழ் சினிமாவின் பிசியான காமெடியனான யோகிபாபு மீது பல தயாரிப்பாளர்கள் புகார் கூறி உள்ளார்களாம். இதில் ஒரு சில நடிகர்களுக்கு மட்டும் நடிகர் சங்கத்திடம் விளக்கம் கேட்டு கூறுமாறு தெரிவித்துள்ளனர். நடிகர் சங்கம் அளிக்கும் பதிலை வைத்து அவர்கள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளார்களாம்.
Vishal
மேற்கண்ட நடிகர்கள் தங்கள் மீதான புகாருக்கு முறையான விளக்கம் அளித்தால் அவர்கள் படங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும், அவர்கள் அளிக்கும் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்றால் அவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கவும் முடிவு செய்துள்ளார்களாம். இதுதவிர விஷால் தலைமையிலான நிவாகத்தினர் தயாரிப்பாளர் சங்கத்தின் நிதியை முறையாக கையாளாத காரணத்திற்காக அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளார்களாம். இதனால் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
இதையும் படியுங்கள்... ரூ.100 கோடி பத்தாது... அதுக்கும் மேல கேட்ட கமல் - ஒரே அடியாக சம்பளத்தை வாரி வழங்கி அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ்