விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் சிம்புவுக்கு பெரியளவில் வெற்றிகள் எதுவும் கிடைக்கவில்லை. அவர் நடிப்பில் வெளிவந்த போடா போடி, வாலு, அன்பானவன் அடங்காதவன், அசராதவன், வந்தா ராஜாவா தான் வருவேன் ஆகிய படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில் இருந்த சிம்புவுக்கு உடல் எடையும் அதிகரித்தது. இதனால் சிம்புவின் கெரியர் அவ்வளவுதான் என்கிற பேச்சும் எழுந்தது.
24
சிம்புவின் மாநாடு
அந்த சமயத்தில் தான் கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டது. இந்த ஊரடங்கு காலகட்டத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட சிம்பு, அதில் தீவிரமாக உடற்பயிற்சி பெற்றதோடு, ஆயுர்வேத சிகிச்சையும் எடுத்து மளமளவென உடல் எடையை குறைத்தார். சுமார் 30 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்து 20 வயசு பையனாக மாறிய சிம்பு, பின்னர் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். அவர் உடல் எடையை குறைத்த பின் நடித்த முதல் படம் மாநாடு.
வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். மாநாடு திரைப்படம் டைம் லூப் கான்செப்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்தது. மிகவும் சிக்கலான திரைக்கதை நேர்த்தியாக மக்களுக்கு புரியும் வகையில் படமாக்கி அதில் வெற்றியும் கண்டார் வெங்கட் பிரபு. நடிகர் சிம்புவின் கெரியரில் 100 கோடி வசூல் அள்ளிய முதல் படம் மாநாடு தான்.
44
தமிழகத்தில் ரீ ரிலீஸ் ஆன மாநாடு
மாநாடு படம் கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அப்படம் வெளியாகி 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், தற்போது அப்படத்தை ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். நடிகர் சிம்பு வருகிற பிப்ரவரி 3ந் தேதி பிறந்தநாள் கொண்டாட உள்ளார். அதையொட்டி மாநாடு திரைப்படத்தை தமிழகமெங்கும் ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். சுமார் 70 திரையரங்குகளில் மாநாடு திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகி உள்ளது. அப்படத்தை திரையரங்குகளில் சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.