சினிமாவில் ஹீரோக்களுக்கு தான் அதிக டிமாண்ட் உள்ளது என்பதை அவர்கள் வாங்கும் சம்பளத்தை வைத்தே தெரிந்துகொள்ளலாம். குறிப்பாக ஒரு காலத்தில் 100 கோடிக்கும் குறைவாக இருந்த நடிகர்களின் சம்பளம் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜெட் வேகத்தில் அதிகரித்து தற்போது 300 கோடியை எட்டிவிட்டது. ஹீரோக்களின் சம்பளம் உயர்ந்தாலும் ஹீரோயின்களின் சம்பளம் இன்னும் உயர்ந்தபாடில்லை. இதுவரை ஒரு நடிகை கூட 50 கோடியை தொட்டதில்லை.
25
திரிஷா, நயன்தாரா சம்பளம்
இந்த நிலையில், கோலிவுட் மட்டுமல்ல பாலிவுட், டோலிவுட் என அனைத்து திரைத்துறையிலும் உள்ளது. கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளாக திரிஷா மற்றும் நயன்தாரா ஆகியோர் உள்ளனர். அவர்கள் ஒரு படத்திற்கு தலா ரூ.10 முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றனர். ஆனால் இந்திய அளவில் இவர்களைவிட பாலிவுட் நடிகைகளுக்கு சம்பளம் வாரி வழங்கப்பட்டு வருகிறது. அங்கு தீபிகா படுகோனே தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார்.
35
பிரியங்கா சோப்ரா சம்பளம்
நடிகை தீபிகா படுகோனே ஒரு படத்துக்கு ரூ.20 முதல் 25 கோடி வரை வாங்கி வருகிறார். கடந்த ஆண்டு வரை அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக தீபிகா படுகோனே இருந்து வந்த நிலையில், தற்போது அவரை ஓவர்டேக் செய்துள்ள பிரபல நடிகை ஒரு படத்திற்கு ரூ.30 கோடி சம்பளம் வாங்கி இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அந்த நடிகை வேறுயாருமில்லை பாலிவுட் நாயகி பிரியங்கா சோப்ரா தான்.
அமெரிக்காவில் செட்டில் ஆன பின்னர் ஹாலிவுட் படங்களில் மட்டுமே நடித்து வந்த பிரியங்கா சோப்ரா, தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ssmb29 திரைப்படத்தின் மூலம் மீண்டும் இந்திய சினிமாவுக்கு திரும்பி இருக்கிறார். இப்படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் பிரியங்கா சோப்ரா. இப்படத்தை சுமார் 1000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டு உள்ளனர்.
55
மகேஷ் பாபு ஜோடியாகும் பிரியங்கா சோப்ரா
ssmb29 படத்தின் படப்பிடிப்பை முழுக்க முழுக்க வெளிநாட்டில் தான் நடத்த உள்ளாராம் ராஜமவுலி. இப்படத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைய 3 முதல் 4 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது. இப்படத்தில் நாயகியாக நடிக்க தான் நடிகை பிரியங்கா சோப்ரா ரூ.30 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார். பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் போன்ற பிரம்மாண்ட வெற்றிப் படங்களை கொடுத்த ராஜமவுலி இப்படத்தை உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டுள்ளாராம்.