சினிமா பின்னணியை வைத்து நடிகர், நடிகைகளின் வாரிசுகள் சினிமாவில் காலூன்றி வரும் நிலையில், இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கரும் தனது டாக்டர் வேலையை தூக்கி எறிந்துவிட்டு சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.
25
ஷங்கரின் அடுத்தடுத்த தோல்வி:
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்தவர் ஷங்கர். ஜென்டில்மேன் படத்தை இயக்கி தன்னை ஒரு வெற்றிப்பட இயக்குநராக கோலிவுட் திரையுலகில் நிலை நிறுத்திக்கொண்டு இவர் . அதன் பிறகு, காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன் என்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். ஆனால், கடைசியாக அவர் இயக்கிய இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஆகிய படங்களுக்கு பெரிதாக வரவேற்பு இல்லை.
தற்போது இந்திய 3 படம் கைவசம் வைத்திருக்கிறார். இந்த நிலையில் தான் ஷங்கரின் மகள் அதிதி விருமன் படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். முத்தையா இயக்கிய இந்த படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் பெரியளவில் ரீச் கொடுக்காத போதிலும், 2 ஆவதாக மாவீரன் படத்தில் நடித்தார். இந்தப் படங்களுக்கு பிறகு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடித்த நேசிப்பாயா படம் வெளியானது. காதல் கதையை மையப்படுத்திய இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.
45
பாடகியாகவும் தடம் பதித்த அதிதி:
சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே மதுர வீரன் என்ற பாடலை பாடி, தன்னை ஒரு பாடகியாகவும் அடையாள படுத்திக்கொண்டார் அதிதி. 2ஆவது படத்தில் வண்ணாரப்பேட்டை என்ற பாடையும் பாடி அசத்தினார். ஒரு நடிகையும் தாண்டி பின்னணி பாடகியாகவும் வலம் வருகிறார். இந்த நிலையில் தான் நேசிப்பாயா படத்தின் புரமோஷனின் போது அதிதி ஷங்கர் பேசியது இப்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றுள்ளது.
அதில், சினிமாவுக்கு வருவதற்கு முன் என் அப்பா ஒரு கண்டீஷன் போட்டார். அதில், மருத்துவருக்கு படித்துக் கொண்டிருந்த நான் படிப்பு முடிந்ததும் நடிக்க ஆர்வம் காட்டுவேன் என்று கூறியிருந்தேன். அதற்கு அப்பா ரொம்ப யோசித்தார். கடைசியாக, ஒரு கண்டிஷன் போட்டார். நான் சினிமாவில் ஜெயிக்கவில்லை என்றால் மீண்டும் டாக்டருக்கான வேலைக்கு செல்ல வேண்டும் என்பது தான் அப்பாவோட கண்டிஷன். கூறியுள்ளார். ஆனால் சினிமாவில், தற்போது அதிகம் ரசிக்கப்படும் நடிகையாக மாறியுள்ளார் அதிதி. தற்போது ஒன்ஸ் மோர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தவிர தெலுங்கில் கருடன் படத்தின் ரீமேக்காக உருவாகும் பைரவம் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.