தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிப்பில் கடைசியாக தக் லைஃப் திரைப்படம் உருவாகி இருந்தது. மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக நடித்திருந்தார் சிம்பு. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஜூன் 5ந் தேதி திரைக்கு வந்த தக் லைஃப் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கும் சிம்பு, திடீரென வெற்றிமாறன் உடன் கூட்டணி அமைத்தார். அவரின் 49வது படத்தை தற்போது வெற்றிமாறன் தான் இயக்கி வருகிறார்.
24
சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி
ஏற்கனவே சிம்புவும், வெற்றிமாறனும் வட சென்னை படத்தில் இணைந்து பணியாற்றுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அப்படம் கைகூடாமல் போனது. இருந்தாலும் தற்போது வட சென்னை யூனிவர்ஸில் உருவாகும் படத்திற்காக தான் தற்போது சிம்புவும், வெற்றிமாறனும் கூட்டணி அமைத்துள்ளார்கள். இப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பாக கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் டெஸ்ட் ஷூட் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் லுங்கி அணிந்தபடி சிம்பு படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படங்கள் லீக் ஆகி வைரலாகின.
34
உடல் எடையை குறைத்த சிம்பு
சிம்பு - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. அப்படத்திற்காக தன்னை தயார்படுத்தி வருகிறார் சிம்பு. அதன் ஒருபகுதியாக நடிகர் சிம்பு தற்போது 10 கிலோ உடல் எடையை குறைத்திருக்கிறாராம். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் வெறும் 10 நாட்களில் 10 கிலோ உடல் எடையை குறைத்துள்ளாராம். சிம்புவின் இந்த டிரான்ஸ்பர்மேஷன் படக்குழுவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளதாம். முன்னதாக ஈஸ்வரன் படத்திற்காக உடல் எடையை குறைத்த சிம்பு, அதற்காக லாக்டவுன் சமயத்தில் நிறைய பயிற்சிகளை மேற்கொண்டதோடு, ஆயுர்வேத சிகிச்சையும் எடுத்து ஒல்லி ஆனார்.
தற்போது உடனடியாக 10 கிலோவை குறைக்க, அவர் தீவிர டயட் பாலோ பண்ணியதாக கூறப்படுகிறது. இதோடு உடற்பயிற்சியையும் தொடர்ந்து செய்து வந்ததால் தான் அவரால் சீக்கிரமாக உடல் எடையை குறைக்க முடிந்ததாம். சிம்பு - வெற்றிமாறன் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளதால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளது. இது நடிகர் சிம்புவின் 49-வது படமாகும். இப்படத்தில் சிம்புவுடன் யார்... யாரெல்லாம் நடிக்கப்போகிறார்கள் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.