தீபாவளிக்கு வெளியாகும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சிம்பு நடித்துள்ள 'மாநாடு' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி திடீர் என மாற்றப்பட்டதாக படக்குழு அறிக்கை வெளியிட்டு தெரிவித்தது அனைவரும்அறிந்ததே..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' படம் வெளியாக இருந்ததால், தியேட்டர் கிடைப்பதில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் ரிலீஸ் தேதியை மாற்றியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த திரைப்படம், வரும் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாக உள்ள, நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகள் படு வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல திரையரங்கில் 'மாநாடு' திரைப்படம் வெளியாவதற்கு முன்னோட்டமாக விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் நடிகர் சிலம்பரசன் இயக்குனர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, உள்ளிட்ட கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் மேடையில் பேசிய நடிகர் சிம்பு, பொதுவாக என்னுடைய படம் என்றால் பிரச்சனை என்பது சாதாரண விஷயமாக இருக்கிறது...
எனக்கும் வெங்கட்பிரபுக்கும் நீண்ட நாள் பழக்கம் உள்ளது. எனக்கு கதை சொல்லிவிட்டு மற்றவர்களை வைத்து படம் எடுக்க சென்று விடுவார். தற்போது தான் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.
நிறைய பிரச்சனைகளை கொடுத்துவிட்டார்கள். பிரச்சனைகளை நான் பார்த்துக்கொள்வேன் .என்னை நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் என கண் கலங்கி அழுதது, அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.