நயன்தாரா பெங்களூரில் பிறந்தவர். இவரது உண்மையான பெயர் டயானா மரியம் குரியன். கேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்த கொடியாட்டு குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தவர்.
இவரது தந்தை இந்திய விமானப்படை அதிகாரி. எனவே டெல்லி, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.
துருவல்லாவில் உள்ள மார்த்தோமா கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.
‘மனசினக்கரே’ படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் நயன்தாரா. இவர் மலையாளத் அறிமுகமான இந்த திரைப்படம் 2003 ஆம் ஆண்டு வெளியானது. இரண்டு வருடத்திற்கு பின்னர் தமிழில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான 'ஐயா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அடுத்தடுத்து, சந்திரமுகி, கஜினி, கல்வனில் காதலி போன்ற படங்களில் நடித்தார். பின்னர் தெலுங்கு பட வாய்ப்புகளும் இவரது கதவை தட்ட, 2006 ஆண்டு 'லட்சுமி' என்கிற படத்தில் அறிமுகமானார்.
2010 இல், நயன்தாரா கன்னடத் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்தார். ‘சூப்பர்’ என்கிற படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின்னர் நயன்தாரா கன்னட படங்களில் நடிக்க வில்லை. தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாள படங்களிலேயே அதிக கவனம் செலுத்தினார்.
இவருடைய நடிப்பில் வெளியாகி ரசிகர்களை அதிகம் கவர்ந்த படங்கள் என்றால்... மாயா (2015), தனி ஒருவன் (2015), நானும் ரவுடி தான் (2015), ராஜா ராணி ( 2013) இருமுகன் (2016), அறம் (2017), கோலமாவு கோகிலா (2018) இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகம் ரசிக்கப்பட்டதோடு சூப்பர் ஹிட் படமாகவும் மாறியது.
திரையுலகில் இவரது முதல் காதல் கிசுகிசுப்பு நடிகர் சிலம்பரசனுடன் தான். ‘வல்லவன்’ படத்தில் இருவரும் ஜோடியாக நடித்த பிறகு இவர்களது உறவு மலர்ந்தது. பின்னர், திடீர் கருத்து வேறுபாடு காரணமாக இவர்களது காதல் முறிந்தது.
இதை தொடர்ந்து நயன்தாரா பிரபுதேவாவுடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அந்த உறவிலும் விரிசல் ஏற்ப்பட்டது.
தற்போது நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் லிங்க் டூ கெதர் வாழ்க்கை முறையில் வாழ்ந்து வருகிறார். சுமார் 6 வருடங்களாக இந்த ஜோடி காதலித்து வரும் நிலையில், அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நயன்தாராவைப் பற்றிய மற்றொரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், ஆகஸ்ட் 2017 இல் அவர் தனது மதத்தை இந்துவாக மாற்றிக்கொண்டார் என கூறப்படுகிறது. சென்னை ஆர்ய சமாஜ் கோவிலுக் அவர் சென்றதாகவும், அங்கு அவர் இந்துவாக மாறுவதற்கான அனைத்து நடைமுறைகளும், சடங்குகளும் நடந்ததாக கூறப்படுகிறது.
இதுவரை பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ள நயன்தாரா, 2007 ஆம் ஆண்டு சிறந்த தென்னிந்திய நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.