Andrea Jeremiah: சேலைக்கு மேல் ஸ்டன்னிங் கோட்..! துளியும் கவர்ச்சி காட்டாமல் அழகில் அசர வைத்த ஆண்ட்ரியா..!

First Published | Nov 17, 2021, 8:05 PM IST

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ஆண்ட்ரியா (Andrea) தற்போது செம்ம கியூடாக சேலை அழகியை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆன்ட்ரியா. “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா“, “சகுனி“, “இது நம்ம ஆளு” போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு ஏராளமான ரசிகர்களையும், நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது.

அதன் மூலம் கமலுடன் “விஸ்வரூபம்” படத்தின் முதலாவது மற்றும் 2ம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தி நடித்தார். 

Tap to resize

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் உடன் ஆன்ட்ரியா நடித்த வடசென்னை திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. 

இடையில் இசையமைப்பாளர் அனிருத் உடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. அதில் அனிருத், ஆன்ட்ரியா லிப் -லாக் காட்சிகள் இடம் பெற்று சர்ச்சையை கிளப்பியது. 

இதனிடையே திருமணமான நடிகருடன் உறவில் இருந்ததாகவும், அதனால் உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த ஆன்ட்ரியா பல மாதங்கள் சிகிச்சையில் இருந்ததாகவும் கூறப்பட்டது. 

.அதனால் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த ஆன்ட்ரியா தற்போது விஜய் , விஜய் சேதுபதி ஆகியோர் முதன் முறையாக ஒன்றிணையும்  “மாஸ்டர்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

தற்போது  இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியா ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. மேலும் அவ்வப்போது... தன்னுடைய அசத்தலான கவர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக புகைப்படம் வெளியிட்டு வருகிறார்.

ஆனால் சமீபத்திய புகைப்படத்தில் துளியும் கவர்ச்சி காட்டாமல் ஆண்டிரியா சேலையிலும், சேலை மீது கோட் அணிந்தபடி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Latest Videos

click me!