'இந்தியன் 2' படத்தில் இனி காஜலுக்கு பதில் இவரா? 6 வருடங்களுக்கு பின் மீண்டும் கமலுடன் இணையும் முன்னணி நடிகை!

First Published | Nov 18, 2021, 1:38 PM IST

'இந்தியன் 2' (indian 2) படத்தில் இருந்து நடிகை காஜல் அகர்வால் (Kajal Agarwal) விலகியதை தொடர்ந்து, அவருக்கு பதிலாக பிரபல முன்னணி நடிகை கமிட் ஆகியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி, கமல்ஹாசனுக்கு தேசிய விருதை பெற்று தந்த திரைப்படம் இந்தியன்.

இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில்  என பலர் நடித்திருந்தனர். ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளியிட்டது.  அதே நேரம் வசூலிலும் கொள்ளை லாபம் பார்த்தது.

Tap to resize

இந்த படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியை தொடர்ந்து, மீண்டும் நடிகர் கமல் ஹாசனை வைத்து 'இந்தியன் 2' படத்தை இயக்க திட்டமிட்டார் ஷங்கர்.

ஆனால் படம் அறிவித்த நாளில் இருந்தே இந்த படங்களுக்கு அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தது. கமல் அரசியலில் ஆர்வம் காட்டி சட்டமன்ற தேர்தலை சந்தித்தார். பின்னர் காலில் பிரச்சனை ஏற்பட்டு மீண்டும் ஆபரேஷன் செய்யப்பட்டது.

மேலும் படப்பிடிப்பை துவங்கிய போது, கமலுக்கு மேக்அப் அலர்ஜி ஏற்பட்டதாலும், படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்ததாலும் படப்பிடிப்பில் தாமதம் ஆனது.

எனவே தன்னுடைய அடுத்தடுத்த படங்களை இயக்குவதில் ஷங்கர் ஆர்வம் காட்டியதால் லைகா தரப்பில் இருந்து, வழக்கு தொடரப்பட்டு சமீபத்தில் சுமூக பேச்சு வார்த்தையில் முடிந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடித்து வந்த காஜல் அகர்வால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் அவருக்கு பதில், மற்றொரு முன்னணி நடிகை கமிட் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, தூங்காவனம் படத்தில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை த்ரிஷா தான் இந்த படத்தில் நடிக்க உள்ளாராம். விரைவில் இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Latest Videos

click me!