தந்தையின் பெயரை திடீரென இணைக்க இது தான் காரணம்..சுவாரஸ்ய பதிலளித்த சிபி சத்யராஜ்..

Kanmani P   | Asianet News
Published : May 13, 2022, 07:50 PM IST

சிபிராஜ் தனது பெயரை  சிபி சத்யராஜ் என மாற்றியதற்கான  விளக்கத்தை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் அந்த விளக்கம் தற்போது வைரலாகி வருகிறது

PREV
18
தந்தையின் பெயரை திடீரென இணைக்க இது தான் காரணம்..சுவாரஸ்ய பதிலளித்த சிபி சத்யராஜ்..
sibi sathyaraj

வாரிசு நடிகர்களுக்கு வாய்ப்பு என்பது குறைவுதான் ஆனாலும் விஜய், சூர்யா போன்றவர்களை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்ட பிரபல நடிகர்களின் பிள்ளைகள் சினிமா துறைக்குள் நுழைவது வழக்கம் தான்.

28
sibi sathyaraj

அதன்படி சினிமாவிற்கு பெரிய கனவுடன் நுழைந்தவர் தான் சிபிராஜ். இவரின் தந்தை சத்யராஜ் இன்று வரை பிரபல நாயகர்களில் ஒருவராகவே  இருந்து வருகிறார். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு குணசித்திரத்திற்கு திரும்பிய சத்யராஜ் பான் இந்தியா நடிகராகவே வலம் வருகிறார்.

38
sibi sathyaraj

ஆனால் இவரது மகனுக்கு தமிழ் திரையுலகில் பெரிதாக வாய்ப்பு எதுவும் அமையவில்லை. தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த ஸ்டுடன் நம்பர் 1 படத்தின் தமிழ் ரீமேக் மூலம் தமிழ் திரையுலகிற்கு என்ட்ரி கொடுத்தார் சிபி. 

48
sibi sathyaraj

ஆனால் இந்த படம் தெலுங்கில் ரஸிஜமௌலிக்கு கொடுத்த ஹிட்டை இங்கு கொடுக்கவில்லை. பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வி கண்டது.

58
sibi sathyaraj

பின்னர் ஜோர், கோவை பிரதர்ஸ், நாய்கள் ஜாக்கிரதை, போக்கிரி ராஜ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனால் எந்த படமும் அவரது தந்தை பெற்ற  வெற்றியை பெறவில்லை என்றே சொல்லவேண்டும்.

68
sibi sathyaraj

இவர் நடித்த பெரும்பாலான படங்களில் சத்தியராஜ் இருப்பர். மகனுக்காக குணசித்திர வேடங்களில் தோன்றியிருந்தும் போதுமான வரவேற்பு இல்லை. 

78
sibi sathyaraj

தற்போது ரங்கா, மாயோன், ரேஞ்சர், வட்டம் உள்ளிட்ட நன்கு படங்களில் கமிட் ஆகியுள்ள சிபி சத்தியராஜ். சமீபத்தில் தனது பெயருடன் தந்தை பெயரை சேர்த்தற்கான காரணத்தை கூறியுள்ளார்.

88
sibi sathyaraj

அந்த பேட்டியில், ' எல்லாமே ஒரு சுயநலம் தான். சினிமாவில் அறிமுகமாகும்போது சிபி என்று தான் அறிமுகமானேன். தற்போது பாகுபலிக்கு பிறகு அப்பா எல்லா மொழி படங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார். அதனால் என்னோட பெயரும் எல்லா மொழி ரசிகர்களுக்கும் தெரியட்டும் என்று சிபி சத்யராஜ் என்று மாற்றிக் கொண்டேன். என்று கூறியுள்ளார்.

click me!

Recommended Stories