விஜயை இயக்கும் டான் இயக்குனர்..வைரலாகும் மெர்சல் போட்டோ!

Kanmani P   | Asianet News
Published : May 13, 2022, 04:25 PM IST

இன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வரும் டான் பட இயக்குனரும் விஜயும் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது  வெளியாகி வைரலாகி வருகிறது.

PREV
18
விஜயை இயக்கும் டான் இயக்குனர்..வைரலாகும் மெர்சல் போட்டோ!
beast

சமீபத்தில் வெளியான பீஸ்ட் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்தது.   நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த படம் கலவையான விமர்சங்களை பெற்ற போதிலும் நல்ல பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனை பெற்றது.

28
vijay66

இதையடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் விஜய் கைகோர்த்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிக்கா மாந்தனா நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

38
vijay 66

ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில், தமன் இசையமைக்கிறார். 

48
vijay 66

ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷ்யாம் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர்.

58
vijay

இந்நிலையில் இன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வரும் டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி விஜயுடன் இருக்கும் மெர்சல் படப்பிடிப்பு தள புகைப்படம் ஒன்றை வைரலாக்கும் ரசிகர்கள் இந்த கூட்டணி இணையவுள்ளதாக கூறிவருகின்றனர்.

68
don

சிபி சக்ரவர்த்தியின், அட்லி இயக்கிய மெர்சல் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்ததோடு நடிக்கவும் செய்திருக்கிறார். அப்போது விஜய் உடன், அவர் எடுத்த புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

78
don

சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தின் டாக்டர் நாயகி பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, பால சரவணன், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

88
DON

இன்று திரையரங்குகளில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து 4 வாரங்களுக்கு பின் நெட்பிளிக்ஸில் டான் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. .

Read more Photos on
click me!

Recommended Stories