14 ஆண்டுகளுக்கு பிறகு..முதல் முறையாக ஆக்ஷன் ஹீரோவான மைக் மோகன்..

First Published May 13, 2022, 6:07 PM IST

சுட்டபழம் என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இதை அடுத்த ரவுண்டை ஹரா என்ற படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாகியுள்ளார் மோகன்.

mike mohan

70 களில் துவங்கி மிகவும் பிரபலமான நடிகராக இருந்தவர் மைக் மோகன். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வருவார் என அனைத்து ரசிகர்களாலும் எதிர்பார்க்கப்பட்ட ஹீரோ.

mike mohan

மிக குறுகிய காலத்தில் அதிக படங்களில் நடித்த மோகன் பல ஹிட்களை கொடுத்துள்ளார். அதோடு இவரது பாடல்களும் தூள் கிளப்பியுள்ளது.

mike mohan

'மூடு பனி' என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மைக் மோகன். இவரின் நடிப்பில் சிகரம் தொட்ட படங்களில் ஒன்றுதான் 'நெஞ்சத்தை கிள்ளாதே'. இந்த திரைப்படம் 365 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. 

mike mohan

அதோடு பின்னர் இவர் நடிப்பில் வெளியான கிளிசல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை போன்ற படங்கள், ஒரு வருடத்திற்கு மிகாமல் ஓடி மோகன் பெயரை நிலைக்க செய்தது.

mike mohan

முன்னணி நாயகராக வளம் வந்த இவரது வாழ்வில் ஒரு நடிகையின் புகார் பேரிடியாக இறங்கியது. இவருக்கு மோசமான நோய் இருப்பதாக கூறிய அந்த நடிகையால் இவரது சினிமா வாய்ப்புகள் அனைத்தும் பாலாய் போனது.

mike mohan

 பின்னர் பட வாய்ப்புகள் இன்றி இருந்த மோகன் கடைசியாக சுட்டபழம் என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு 14 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இப்போது' ஹரா' என்ற படத்தின் மூலம் தொடங்கி இருக்கிறார். அதுவும் ஆக்ஷன் ஹீரோவாக.இந்த படத்தை விஜய் ஸ்ரீ இயக்கி வருகிறார்.

click me!