நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன், தனது தந்தையைப் போலவே சினிமாவில் பன்முகத்திறமை கொண்டவராக திகழ்ந்து வருகிறார். பாடகி, இசையமைப்பாளர், நடிகை என பன்முகத்திறமை கொண்ட இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில் அடுத்தடுத்து விஜய், சூர்யா, அஜித், தனுஷ் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து டாப் நடிகையாக உயர்ந்தார்.
தமிழை விட தெலுங்கில் டாப் கியரில் செல்லும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில், சமீபத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்த வால்டர் வீரய்யா மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்த வீர சிம்ஹாரெட்டி ஆகிய திரைப்படம் ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இதில் அவர் சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா போன்ற மூத்த ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தது சர்ச்சையாக பேசப்பட்டாலும், அப்படம் ஹிட் ஆனதால் செம்ம குஷியில் இருப்பதாக ஸ்ருதிஹாசன் பேசி இருந்தார். இவர் நடிப்பில் தற்போது சலார் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ருதி.
இதையும் படியுங்கள்... ஷூட்டிங் ஸ்பாட்டில் சத்தம்போட்டு கத்திய நயன்தாரா... சவுண்டு கேட்டு ஜெர்க் ஆன ராதிகா - நயன் இவ்ளோ டெரரானவரா!
நடிகை ஸ்ருதிஹாசன் தமிழில் கடைசியாக நடித்த திரைப்படம் லாபம். படத்தின் பெயரில் லாபம் இருந்தாலும், படம் நஷ்டம் தான் அடைந்தது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். மறைந்த இயக்குனர் ஜனநாதன் இறக்கும் முன் இயக்கிய கடைசி படமும் இதுதான். இப்படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகர் விஜய் சேதுபதி தன்னை சந்திக்க வந்த ரசிகர்களை ஆரத்தழுவி வரவேற்று தன்னுடைய அன்பை வழக்கம் போல் முத்தத்தில் வெளிப்படுத்தியதாக கூறப்பட்டது.
இந்த சம்பவத்தை பார்த்து செம்ம ஷாக் ஆகிவிட்டாராம் ஸ்ருதி. ஏனெனில், லாபம் திரைப்படம் கொரோனா பரவல் அதிகமாக இருந்த சமயத்தில் படமாக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், விஜய் சேதுபதி தனிநபர் இடைவேளையை கடைபிடிக்காமல் நடந்து கொண்டதாகவும் இதனால்... ஸ்ருதி ஹாசன் படப்பிடிப்பில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்பட்ட நிலையில், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும், இது வெறும் வதந்தி என தற்போது தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்கள்... மேலும் உடல் எடை குறைந்து... எலும்பும் தோலுமாய் மாறிய ரோபோ சங்கர் - லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
கொரோனா சமயத்தில் பல்வேறு நிபந்தனைகளோடு தான் அரசு படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்தது. முக்கியமாக படப்பிடிப்பை ரசிகர்கள் பார்ப்பதற்கு கூட தடை விதிக்கப்பட்ட நிலையில், எப்படி விஜய் சேதுபதி அவரது ரசிகர்களை சந்தித்திருக்க முடியும்? அதே போல் விஜய் சேதுபதியை பொறுத்தவரை தன்னுடைய நலனை விட ரசிகர்களின் நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். கொரோனா தலை தூக்கியத்தில் இருந்து சகஜ நிலை திரும்பும் வரை விஜய் சேதுபதி தன்னுடைய ரசிகர்களையே சந்திக்கவில்லை என கூறுகிறது தரப்பு.