தமிழ் சினிமாவில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான 'உனக்கு 20 எனக்கு 18' திரைப்படத்தின் மூலம், இரண்டாவது நாயகியாக அறிமுகமானவர் ஸ்ரேயா. இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை த்ரிஷா நடித்திருந்தார்.
மேலும், தனுஷ், ஜெயம் ரவி போன்ற ஹீரோக்களுடனும் நடித்து தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்கள் லிஸ்டில் இடம்பிடித்தார்.
சிறு கதாபாத்திரமாக இருந்தாலும், ஒரு சில நிமிடங்கள் வந்து போனாலும்... உணர்ச்சிகளை கொட்டி நடித்திருந்தார். எனவே இவருடைய இந்த கதாபாத்திரம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.
தமிழில் நரகாசுரன், மற்றும் சண்டைக்காரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதே போல் இரண்டு ஹிந்தி படங்களிலும் ஒரு கன்னட படத்திலும் நடித்துள்ளார்.
ஷூட்டிங் இல்லாத நாட்களில் தன்னுடைய மகள் மற்றும் கணவருடன் பொழுதை ஜாலியாக கழித்து வரும் இவர், நீச்சல் குளத்தில் குடும்பத்தோடு கும்மாளம் போட்ட புகைப்படத்தை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.