தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் கைவசம் தற்போது ரஜினிகாந்தின் கூலி, விஜய் தேவரகொண்டாவின் கிங்டம், விக்னேஷ் சிவன் இயக்கிய லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, சிவகார்த்திகேயனின் மதராஸி, தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ஆகியவை உள்ளன. அடுத்த ஆறு தாங்களில் இந்த படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இதற்கான இசையமைப்பு வேலைகளில் பிசியாக இருக்கும் அனிருத், அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். ஹுகும் என்கிற பெயரில் இவர் நடத்தும் இசை நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் வேறலெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்து வந்தது.
24
சென்னையில் ஹுகும் இசை நிகழ்ச்சி
தொடர்ச்சியாக அனிருத் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி வந்த நிலையில், அவர் எப்போது சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்துவார் என்கிற கேள்வி தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது. அந்த கேள்விக்கு விடை அளிக்கும் விதமாக வருகிற ஜூலை 26ந் தேதி இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னரே அறிவிப்பு வெளியாகி அதற்கான முன்பதிவும் படு ஜோராக நடைபெற்றது. அந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட 30 நிமிடங்களிலேயே மொத்தம் இருந்த 30 ஆயிரம் டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. அந்த அளவுக்கு அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு செம டிமாண்ட் இருந்து வந்தது.
34
திடீரென ரத்து செய்யப்பட்ட ஹுகும் கான்சர்ட்
இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் அனிருத் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் சென்னையில் ஜூலை 26ந் தேதி நடைபெற இருந்த ஹுகும் கான்சர்ட் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர். மேலும் டிக்கெட் வாங்கியவர்களுக்கு 7 முதல் 10 நாட்களுக்குள் டிக்கெட் தொகை திருப்பி அனுப்பப்படும் என்றும் விரைவில் இசை நிகழ்ச்சிக்கான புது தேதியையும் இடத்தையும் அறிவிப்பதாக குறிப்பிட்டிருந்தனர். அதிகளவு டிக்கெட் டிமாண்ட் இருந்ததன் காரணமாக இந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்வதாக குறிப்பிட்டு இருந்தனர்.
இருப்பினும் அனிருத்தின் இசை நிகழ்ச்சி ரத்தானதற்கு காவல்துறை அனுமதி அளிக்காததும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த இசை நிகழ்ச்சியை நடத்த 30 ஆயிரம் பேருக்கு அனுமதி கோரி முதலில் ஒப்புதல் வாங்கி இருக்கிறார்கள். ஆனால் மேலும் 10 ஆயிரம் டிக்கெட்டுக்கு டிமாண்ட் இருப்பதை கருத்தில் கொண்டு, மேலும் 10 ஆயிரம் பேர் கலந்துகொள்ள காவல்துறையிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள். ஆனால் காவல்துறை அதற்கு அனுமதி அளிக்கவில்லையாம். ஏற்கனவே ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் அளவுக்கு அதிகமாக கூட்டம் வந்ததால் பல அசம்பாவித சம்பவங்கள் நடந்தன. அதனை மனதில் வைத்து காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது.
இது ஒரு காரணமாக இருந்தாலும், அனிருத்துக்கு உள்ள பிசி ஷெட்யூலும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஏனெனில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்த 5 நாட்களாவது தேவைப்படுமாம். அனிருத்துக்கு ஜூலை 31ந் தேதி கிங்டம் பட ரிலீஸ் உள்ளது. அடுத்து ஆகஸ்ட் 14ந் தேதி கூலி படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த இரண்டு பிரம்மாண்ட படங்கள் லைன் அப்பில் உள்ளதால் அதன் பணிகளை முடிக்க முடியாது என்பதை கருத்தில் கொண்டும் இந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.