திரையரங்குகளைப் போல் ஓடிடி தளங்களிலும் வார வாரம் புதுப்படங்கள் ரிலீஸ் ஆன வண்ணம் உள்ளன. ஒரு படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி 28 நாட்களுக்குள் ஓடிடிக்கு வந்துவிடுகின்றன. இதனால் படங்களை தியேட்டர்களில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அதேநேரத்தில் ஓடிடி பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஜூலை 14ந் தேதி முதல் 20ந் தேதி வரை ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை ஓர்மேக்ஸ் தளம் வெளியிட்டுள்ளது. அதில் என்னென்ன படங்கள் மற்றும் வெப் தொடர்கள் இடம்பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம்.
24
அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 திரைப்படங்கள்
ஓடிடியில் அதிகம் வியூஸ் அள்ளிய டாப் 5 படங்களின் பட்டியலில் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகி வரும் ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட் என்கிற ஆங்கில திரைப்படம் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இப்படத்திற்கு 15 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக நான்காம் இடத்தை அஜய் தேவ்கன் மற்றும் ரிதேஷ் தேஷ்முக் நடித்த பாலிவுட் திரைப்படமான ரெய்டு 2 பிடித்துள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்த படத்திற்கு 17 லட்சம் வியூஸ் கிடைத்திருக்கிறது.
34
தக் லைஃபை முந்திய குபேரா
கடந்த வாரம் ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய படங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் இந்த வாரம் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இப்படம் 20 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக தனுஷின் குபேரா திரைப்படம் இந்த வாரம் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இப்படத்திற்கு 25 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தை ஆப் ஜெய்சோ கொய் என்கிற இந்திப் படம் பிடித்துள்ளது. நெட்பிளிக்ஸில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் 37 லட்சம் வியூஸ் உடன் முதலிடத்தில் உள்ளது.
அதிகம் பார்க்கப்பட்ட வெப் தொடர்களின் பட்டியலில் ஸ்குவிட் கேம் சீசன் 3 ஐந்தாம் இடத்தில் உள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்த வெப் தொடர் கடந்த வாரத்தில் மட்டும் 20 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. நான்காம் இடத்தில் தி கிரேட் இந்தியன் கபில் ஷோ என்கிற நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் உள்ளது. இந்நிகழ்ச்சி நெட்பிளிக்ஸில் 25 லட்சம் பார்வைகளை பெற்றிருக்கிறது. கடந்த சில வாரங்களாக முதலிடத்தை ஆக்கிரமித்து இருந்த பஞ்சாயத் சீசன் 4 என்கிற இந்தி வெப் தொடர், இந்த வாரம் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. அமேசான் பிரைமில் உள்ள இந்த வெப் தொடர் 26 லட்சம் பார்வைகளை பெற்றிருக்கிறது.
அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகிவரும் Mitti Ek Nayi Pehchaan என்கிற இந்தி வெப் தொடர் இந்த வாரம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த வெப் தொடருக்கு 32 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. Special OPS சீசன் 2 என்கிற வெப் தொடர் தான் இந்த வாரம் முதலிடத்தை பிடித்துள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்த வெப் தொடர் 62 லட்சம் வியூஸ் அள்ளி இருக்கிறது.