இன்ஸ்டாகிராமில் தனக்கென சுமார் 30 கோடிக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டவர் கிம் கர்தாஷி. உலக அளவில் பிரபல சூப்பர் மாடலாக இருந்து வரும் இவர், அமெரிக்காவின் பில்லியனர் பட்டியலில் இடம் பிடித்துள்ளவர். மாடலிங் துறையை தாண்டி, அழகு சாதன நிறுவனம் ஒன்றையும், உள்ளாடை நிறுவனம் ஒன்றையும் நிர்வகித்து வரும் தொழிலதிபராகவும் உள்ளார்.