பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தன் வாழ்வில் பட்ட இன்னல்களையும் அதன் மூலம் பெற்ற வெற்றிகளும் குறித்தான 800 படத்தில் அவரே நாயகனாக நடிக்கிறார் என்கிற சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது ஏற்கனவே நாம் அறிந்த ஒன்றுதான். முன்னதாக முத்தையா முரளிதரன் ரோலில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாக இருந்தார். இதற்கான அறிவிப்பும் வெளியாகி இருந்தது.
ஆனால் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்பட்டது குறித்தான எதிர்ப்பு கிளம்பியதால் விஜய் சேதுபதி முரளிதரன் ரோலில் நடிக்க மறுப்பு தெரிவித்து, இப்படத்தில் இருந்து விலகி விட்டார். இதை அடுத்து படம் சில ஆண்டுகளாக எந்தவித அறிவிப்பும் இல்லாமல் முடங்கி இருந்தது.
24
Muttiah Muralitharan Vijay Sethupathi
முன்னதாக 800 படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகி இருந்தது. இதில் விஜய் சேதுபதி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த ஸ்பின்னரை சித்தரிக்கும் வகையில் மேக்கப் செய்யப்பட்டிருந்தார். பார்ப்பதற்கு முரளிதரன் போலவே காட்சி அளித்திருந்தார் விஜய் சேதுபதி. இந்த போஸ்டரும் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த நிலையில் தமிழர் விரோத நிலைப்பாட்டில் இருந்த இலங்கை பிரதமர் ராஜபக்சேவை முத்தையா முரளிதரன் ஆதரிப்பதாக கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன்காரணமாக விஜய் சேதுபதி அந்த படத்தில் நடிக்க கூடாது என்கிற குரலும் வலுத்தது இதையடுத்து மக்கள் செல்வன் பின் வாங்கினார்.
34
muttiah muralitharan movie
பின்னர் சமீபத்தில் 800 என்ற வாழ்க்கை வரலாற்று படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க மற்றொரு நடிகரை திரைப்பட தயாரிப்பாளர் அணிகியுள்ளதாக கூறப்பட்டது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க தேவ் படேலை பட குழு அனுகி உள்ளதாக ஊடகங்களில் செய்திகளும் வெளியானது. விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லினர் திரைப்படத்தில் தேவ் படேல் முக்கிய ரோலில் நடித்திருப்பார்.
முன்னதாக ஹோட்டல் மும்பை, தி வெடிங் கெஸ்ட், தி கிரீன் நைட் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க பிளாக்பஸ்டர் படங்களிலும் நடித்துள்ளார் தேவ்.. அதோடு OTT தளத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். ஆனால்தேவ் படேல் நாயகனாக 800 படத்தில் நடிக்கவுள்ளது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
44
Muttiah Muralitharan
இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தன் வாழ்வில் பட்ட இன்னல்களையும் அதன் மூலம் பெற்ற வெற்றிகளும் குறித்தான 800 படத்தில் அவரே நாயகனாக நடிக்கிறார் என்கிற சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை எம் எஸ் ஸ்ரீபதி என்பவர் இயக்குகிறார்.
இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி காரணமாக அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் படப்பிடிப்பை தற்போது சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும். இதற்கான செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த ஆபிஸியால் அறிவிப்பை நாம் விரைவில் எதிர்பார்க்கலாம் என தெரிகிறது.