நடிகர் தனுஷின் போயஸ் கார்டன் வீடு கட்டிய பிரச்சனை ஒரு வருடத்திற்கு மேலாகியும் ஓயாத நிலையில், பிரபலங்கள் பற்றி சமூக வலைத்தளத்தில் பேசி வரும் மருத்துவர் காந்தராஜ் மற்றும் செய்யாறு பாலு ஆகியோர் தனுஷின் வீடு குறித்து கூறியுள்ள தகவல் ரசிகர்களால் உற்றுநோக்க பட்டுள்ளது.
இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகனான நடிகர் தனுஷ், இன்று கோலிவுட் திரை உலகை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் வரை அனைவராலும் அறியப்பட்ட நடிகராக உள்ளார். நடிகர் என்பதைத் தாண்டி தனுஷ் பன்முக திறமையாளராகவும் சினிமாவில் அறியப்படுகிறார். குறிப்பாக நடிப்பு, இயக்கம், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், என தன்னுடைய திறமைகளை தானே செதுக்கி கொண்டார் தனுஷ்.
26
Dhanush and Aishwarya divorce:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட தனுஷுக்கு லிங்கா - யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர். மனைவி ஐஸ்வர்யாவுடன் சுமார் 14 வருடங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த தனுஷ், கடந்த ஆண்டு திடீரென ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தார். இந்த விவாகரத்துக்கு காரணம், தனுஷ் சக நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வந்தது தான் என ஒரு தரப்பினர் கூறினாலும், பாடகி சுசித்ரா போன்ற சிலர் ஐஸ்வர்யா தான் விவாகரத்துக்கு காரணம் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.
ஆனால் ஐஸ்வர்யா - தனுஷ் இருவருமே...தங்களுடைய விவாகரத்துக்கான உண்மை காரணம் குறித்து தற்போது வரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. விவாகரத்தை அறிவித்த பின்னர் தனுஷ் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில், ஐஸ்வர்யாவோ திரைப்படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். அவர்களுடைய பிள்ளைகள் இருவரும் அம்மா - அப்பாவிடம் மாறி மாறி வாழ்ந்து வருகின்றனர்.
46
Actor Dhanush Poes Garden House:
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து சர்ச்சை ஓய்ந்தாலும், தனுஷ் போயஸ் கார்டனில் கட்டி உள்ள வீடு குறித்து எழுந்த சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. ரஜினியை விட பல கோடிகளை வாரி இறைத்து தனுஷ் கட்டி இருக்கும் இந்த பிரம்மாண்ட வீட்டிற்கு அடிக்கல் நாட்டியபோது ரஜினி, ஐஸ்வர்யா, ஆகியோர் கலந்து கொண்ட நிலையில், கிரஹப்ரவேசத்தின் போது... ஊரிலேயே இல்லாமல் குடும்பத்தோடு பெங்களூருக்கு சென்றனர்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு திரைப்படத்தில் நடிக்காமல் இருப்பதாக கூறப்படுவது ஒருபுறம் இருக்க... அப்படி பல தயாரிப்பாளர்களிடம் இருந்து பணம் பெற்று தான் இந்த வீட்டை தனுஷ் கட்டியுள்ளதாகவும். பெரிய தயாரிப்பாளர்கள் படங்களிலில் மட்டுமே நடிக்கும் தனுஷ், வட்டிக்கு வாங்கி அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர்கள் பலரை தற்போது வரை தவிக்க விட்டு வருவதாக சினிமா பிரபலங்கள் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தும், மருத்துவர் காந்தராஜ் கூறியுள்ளார்.
66
Kantharaj and Cheiyaaru Balu Allegation:
அதே போல் செய்யாறு பாலுவும், தயாரிப்பாளர்கள் பலரிடம் பணத்தை வாங்கி கொண்டு அவர்களை தவிக்க விடுவது நியாயம் இல்லை என, தனுஷ் மீது குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.