Published : Aug 01, 2024, 07:06 PM ISTUpdated : Aug 01, 2024, 07:18 PM IST
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முதல்வரின் நிவாரண நிதிக்கு மம்முட்டி மற்றும் ஃபகத் பாசில் ஆகியோர் நிவாரண நிதி வழங்கியுள்ளனர்.
கேரள மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக பருவ மழை பெய்து வரும் நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன், வயநாட்டில் உள்ள மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பள்ளத்தாக்குகளில் இருந்த சுமார் 3 கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தன.
25
Government save People:
இரவு நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர சம்பவத்தால், பலர் தூங்கிக் கொண்டிருக்கும் போதே மண்ணுக்குள் புதையும் நிலை ஏற்பட்டது. ஒரு பக்கம் மண்ணில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களையும், ரத்த காயங்களுடன் இருப்பவர்களையும் மத்திய மற்றும் மாநில மீட்பு படையினர், ராணுவ வீரர்கள், கடல் படையினர், விமானப் படையினர், தீயணைப்பு துறையினர், சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மீட்க போராடி வருகிறார்கள்.
மேலும் பல மண்ணை தோண்ட தோண்ட சட்டங்கள் கிடைத்து வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்கிற அச்சமும் எழுந்துள்ளது. வயநாட்டில் ஏற்பட்டுள்ள இந்த சேதத்தில் இருந்து மக்களை மீட்க, கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு பிரபலங்கள் மற்றும் வசதி படைத்தோர் நிதி வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
45
actor chiyaan vikram donates 20 lakhs
எனவே நேற்றைய தினம் நடிகர் சீயான் விக்ரம் முதல் ஆளாக வந்து ரூபாய் 20 லட்சம் நிவாரண நிதியை வழங்கினார். அவரை தொடர்ந்து நடிகர் சூர்யா, கார்த்திக், ஜோதிகா ஆகியோர் ரூ.50 லட்சம் நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல பிரபலங்கள் நிவாரண நிதி வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மலையாள திரையுலகை சேர்ந்த இரு பிரபலங்கள் நிவாரண நிதி குறித்து அறிவித்துள்ளனர்.
அந்த வகையில் நடிகர் மம்மூட்டி மற்றும் அவருடைய மகன் துல்கர் சல்மான் இருவரும் இணைந்து ரூ.35 லட்சம் நிவாரண நிதியை வழங்கி உள்ளனர். இவரை தொடர்ந்து நடிகை நஸ்ரியா மற்றும் அவருடைய கணவர் ஃபகத் பாசில் இருவரும் இணைந்து ரூ. 25 லட்சம் நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.