'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து விலகும் முக்கிய நடிகர்? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

First Published Aug 15, 2021, 7:39 PM IST

விஜய் டிவி தொலைக்காட்சியில் முக்கிய சீரியல்களில் ஒன்றான 'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து பிரபல நடிகர் விலக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்களை அப்செட் ஆகிகியுள்ளது.
 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியலுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. கொரியன் தொடரை டப் செய்து வரும் தொலைக்காட்சிக்கு மத்தியில் “கிருஷ்ணகோலி’’ என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது.

விஜய் டிவி.யில் டாப் ரேட்டிங் கொண்ட இந்த சீரியலில் நடித்து வரும் அனைவருக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் கதாநாயகனாக நடிக்கும் பாரதிக்கு தம்பி கதாபாத்திரத்தில் நடித்து வரும், அகிலனுக்கு பாரதியை காட்டிலும் பெண் ரசிகர்கள் அதிகமாகவே உள்ளனர்.

இவருக்கு தற்போது அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாலும், சிறிய வயதில் இருந்தே வெள்ளித்திரையில் ஜொலிக்க வேண்டும் என்று கனவோடு வாழ்ந்து வருவதாலும் இவர் இந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வரை இதுற்குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், இவருக்கு ஜோடியாக நடித்து வரும் அஞ்சலி... தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இந்த தகவலை உறுதி செய்வது போல் மீம்ஸ் ஒன்றை போட்டு இனி இவற்றை மிஸ் செய்வேன் என தெரிவித்துள்ளார். 

click me!