பிரபல குணச்சித்திர நடிகரும், காமெடி நடிகருமான கார்த்திக்... வீர பெண்மணிகளாக பார்க்கப்படும், ராணி பத்மாவதி, ஜான்சி ராணி, போன்றோர் வேடம் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஹிந்தியில் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்து வெளியான, 'குரு' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் டி.எம்.கார்த்தி.
பல மேடை நாடகங்களில் நடித்த அனுபவத்தை வைத்தே இவர் நடிகராக மாறினார்.
இவர் தமிழில் நடிகர் ஆர்யா - த்ரிஷா நடிப்பில் வெளியான சர்வம் படத்தின் மூலம் அறிமுகமானார்.
அடுத்தடுத்து, பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
குறிப்பாக மதராசபட்டினம், தெய்வதிருமகள், நண்பன், ராஜா ராணி போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
வெளிநாட்டு மாப்பிள்ளை முதல், கிராமத்து வேடம் முதல் எப்படி பட்ட கதாபாத்திரத்திலும் பொருத்தி நடிக்க கூற சிறந்த நடிகராக மட்டும் இன்றி, நகைச்சுவை நடிகராகவும் பார்க்கப்படுகிறார்.
tm karthick
இந்நிலையில், இவர்... இந்தியாவே போற்றும் வீர பெண்களை போல் வேடமிட்டு போட்டோ சூட் ஒன்றை எடுத்து கொண்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இவரது இந்த புதுமுயற்சிக்கு அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
எத்தனையோ சுதந்திர போராட்ட வீரர்கள் இருந்தாலும், வீர பெண்மையாக இவர் மாறி காட்சியளிக்கிறார்.