பிரபல திரையரங்கில் காலாவதியான உணவுப் பொருட்கள் - உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடி!

Published : Mar 03, 2025, 04:43 PM IST

சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில், காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

PREV
14
பிரபல திரையரங்கில் காலாவதியான உணவுப் பொருட்கள் - உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடி!

ஓவ்வொரு வாரமும் திரையரங்குகளில் 30-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிறது. இதில் பெரும்பாலான படங்கள் தோல்வியை தழுவினாலும் 3 அல்லது 4 படங்கள் இரண்டு வாரங்கள் ஓடி ரூ.50 கோடி மற்றும் ரூ.100 கோடி வசூல் சாதனையை படைக்கிறது. சில பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி தோல்வியை தழுவினாலும், அவை ரூ.100 வசூலை எட்டிவிடுகிறது.
 

24
நல்ல படங்களுக்கு ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள்

தொடர் விடுமுறை நாளில் வெளியாகும் படங்களுக்கும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெரும் படங்களுக்கும் எப்போதும் ரசிகர்கள் தங்களின் ஆதரவை கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தான், சமீபத்தில் வெளியான குடும்பஸ்தன், டிராகன், போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படங்களை பலர் குடும்பங்களோடு வந்து கண்டு ரசித்தனர்.
 

34
கூடுதல் தொகைக்கு விற்பனை செய்யப்படும் தின்பண்டங்கள்

சினிமா தியேட்டருக்கு வந்தால், டிக்கெட் எடுக்கும் விலையை விட ஜாஸ்தி அங்கு விற்பனை செய்யப்படும் ஸ்னாக்ஸ் வாங்குவது தான். வெளியில் ரூ.10 விற்கப்படும் பாப் கான் திரையரங்குகளில் ரூ.50 ரூபாய்க்கு விருகப்படுகிறது. அதே போல் வெளியில் கிடைக்கும் விலையை விட 2 மடங்கு கூடுதலாகவே விற்கப்படுகிறது. ஒரு சில திரையரங்குகளில் சுகாதாரம் மற்றும் காலாவதியான பொருட்கள் விற்கப்படுவது இல்லை என்றாலும், சில திரையரங்குகளில் கூடுதல் காசு கொடுத்ததும் காலாவதியான பொருட்கள் கிடைப்பது அதிர்ச்சியின் உச்சம்.
 

44
உணவு பாதுகாப்பு துறை அதிரடி

இந்நிலையில் சென்னையில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இது தொடர்பாக உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி உள்ளனர். அப்போது காலாவதியான பொருட்கள் இருப்பது கண்டுபிக்கப்பட்ட நிலையில்,  கேண்டீனின் உரிமத்தை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து, சென்னை முழுவதும் திரையரங்குகளில் சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories