Nilavuku En Mel Ennadi Kobam : நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (நீக்) திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியானது. ரிலீசுக்கு முன்னர் பல முன்னணி இயக்குனர்கள் உட்பட பலர் தனுஷ் படத்தை புகழ்ந்து பேசினர். ஆனால், பாக்ஸ் ஆபிஸில் படம் படுதோல்வியடைந்தது.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் தனுஷ் ஒரு பாடலில் மட்டும் வந்து செல்வார். படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், ராபியா, வெங்கடேஷ் மேனன், அன்பு, சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தனுஷ் தான் இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இருந்தார். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார். அவரது இசை படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்திருந்தது.