கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தன்னுடைய மகன் சிலம்பரசனுக்கு ஒரு பெண்ணை பார்த்து, திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என அவரது தந்தை டி.ராஜேந்தர் போராடி வருகிறார். சிம்பு சில நடிகைகளின் காதல் கிசுகிசுவில் சிக்கும்போதெல்லாம், தன்னுடைய மகனின் ஆசை படியே திருமணம் நடக்கும் என தெரிவித்து வந்தார்.
கடைசியாக ஹன்சிகாவின் காதல் கிசுகிசுவில் சிம்பு சிக்கிய போது, இவர்கள் இருவருக்கும் திருமணம் வரை பேச்சுவார்த்தை நடந்த நிலையில், திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த பேச்சுவார்த்தை கைவிடப்பட்டது. பின்னர் ஹன்சிகா மீண்டும் சினிமாவில் நடிப்பதில் பிஸியானார். சிம்புவும் தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்து அடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
மேலும் செய்திகள்: 'நட்சத்திரம் நகர்கிறது' படம் எப்படி இருக்கு? ஷார்ட் விமர்சனம் இதோ..
தற்போது நடிகர் சிம்புவுக்கு 40 வயது ஆகிவிட்ட நிலையில், தன்னுடைய சமூகத்தைச் சேர்ந்த பெண் கிடைத்தால், உடனடியாக சிம்புவுக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என சிம்புவின் பெற்றோர் முடிவு செய்துள்ளதாகவும், இதன் காரணமாக டி ராஜேந்தர் தன்னுடைய சொந்த ஊரான மயிலாடுதுறையில் உள்ள உறவினர்கள் மற்றும் தன்னுடைய சமூக்கடை சேர்ந்தவர்களிடம் பெண் கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
எனும் விடாமுயற்சியாக பெண் தேடும் படலத்தை கையில் எடுத்துள்ளார் டி.ராஜேந்தர். சமீபத்தில் கூட தொழிலதிபர் ஒருவரின் பெண்ணை சிலம்பரசனுக்கு பெண் கேட்டுள்ளார். அவர்கள் யோசித்து சொல்வதாக தெரிவித்ததாகவும், பின்னர் சிம்புவின் வயது மற்றும் அவர் சில நடிகைகளுடன் காதல் கிசுகிசுவில் வெளிப்படையாக சிக்கியுள்ளதை காரணம் காட்டி பெண் கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.