'நட்சத்திரம் நகர்கிறது' படம் எப்படி இருக்கு? ஷார்ட் விமர்சனம் இதோ..

First Published | Aug 31, 2022, 12:31 PM IST

'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின்னர், இயக்குனர் பா.ராஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நட்சத்திரம் நகர்கிறது' இந்த படம் குறித்த விமர்சனம் இதோ...
 

இயக்குனர் பா.ரஞ்சித்தின் படங்களில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களும் ஒன்று சேர்ந்து உருவாகி உள்ளது 'நட்சத்திரம் நகர்கிறது'. திரைப்படம் அதேபோல் பா.ரஞ்சித்தின் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் சில நடிகர்களும் இதில் தவறாமல் நடித்துள்ளனர். 

குறிப்பாக சார்பட்டா படத்தில் மாரியம்மாளாக வந்து மிரட்டிய துஷாரா விஜயன், இந்த படத்தில் ரேனே என்கிற கதாபாத்திரத்தில் தன்னுடைய  அல்டிமேட் நடிப்பை வெளிப்படுத்தி ஆடியன்ஸ் நெஞ்சங்களை வென்றுள்ளார். அதேபோல் இனியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள காளிதாஸ் ஜெயராமின் நடிப்பும் மிகவும் எதார்த்தமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கலையரசன் வழக்கம்போல் தன்னுடைய அசால்ட்டான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது அற்புதம்.

மேலும் செய்திகள்: டைட் உடையில் ஹெவி ஒர்க் அவுட்..! உடலை வில்லாக வளைத்து சூடேற்றும் ரித்திகா சிங்..! ஹாட் போட்டோஸ்..
 

Tap to resize

இயக்குனர் பா ரஞ்சித் தன்னுடைய முதல் படமான 'அட்டகத்தி' படத்தில் எப்படி காதலை மையமாக வைத்து படத்தை இயக்கி இருந்தாரோ, அதேபோல் இந்த படமும் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்றாலும், மாறுபட்ட காதல் கதைகளையும், அதன் பின்னால் உள்ள  சாதி அரசியலையும் போலியான பின்பங்களையும் நாடகம் மூலம் மக்களுக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதே இந்தப் படத்தின் கதைக்களம்.

பொதுவாக காதல் என்றால் ஆண் - பெண் இருவருக்கும் இடையே வருவதை மட்டுமே காதலாக பலர் பார்க்கிறார்கள். அதை தாண்டி, இப்படத்தில் பலரும் சொல்ல தயங்கும் தன் பால் ஈர்ப்பாளர்கள் காதல்,  திருநங்கைகள் காதல், போன்றவற்றையும், அதன் பின்னால் உள்ள சாதி அரசியல், போலி நாடகங்கள் போன்றவற்றையும், கூறி  காளிதாஸ் மற்றும் துஷாரா விஜயன் இடையே உள்ள காதல் இணைகிறது பிரிகிறது என்பதை படம் முழுக்க அழகாக எடுத்து கூறியுள்ளார் பா ரஞ்சித்.

மேலும் செய்திகள்: Cobra Review: விக்ரம் நடிப்பு விருதுகளை குவிக்கும்..! 'கோப்ரா' படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ!
 

படத்தின் துவக்கத்தில் சற்று கதை புரியாமல் இருந்தாலும் போகப் போக கதைக்களம் சூடு பிடிக்கிறது. அதிலும் கலையரசனின் நடிப்பு அற்புதம். பொதுவாகவே பா ரஞ்சித்தின் படங்களில் பெண்களுக்கான கதாபாத்திரம் மிகவும் தைரியமானதாக அமைக்கப்பட்டிருக்கும். அதே போல் இந்த படத்திலும் துஷாரா விஜயனின் கதாபாத்திரம் இருக்கிறது. இதற்கு முன்னால் வெளியான சார்பட்டா படத்தில் மாரியம்மாள் கதாபாத்திரத்தை விட, இந்த படத்தில் கூடுதல் பொறுப்பை உணர்ந்து, தன்னுடைய அசாத்திய நடிப்பால்  கைத்தட்டல்களை அள்ளியுள்ளார்.

புத்தர் சிலை, காட்டு பூனை, நாட்டு பூனை என பூனையை வைத்து சில குறியீடுகளை வைத்து பா.ரஞ்சித் சொல்லியுள்ள கருத்துக்கள் பாராட்டத்தக்கது.  ஆவண கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ், இளவரசன் போன்றவர்களின் மரணங்களுக்கு பின்னால் உள்ள சாதி அரசியலும் இந்த படத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது பார்க்க முடிகிறது.

மேலும் செய்திகள்: 'பொன்னியின் செல்வன் 1' ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் எப்போது..! படக்குழு வெளியிட்ட அதிகார பூர்வ அறிவிப்பு!
 

முதல் பாதி சற்று குழப்பத்துடனே படம் சென்றாலும், இரண்டாவது பாதியில் இயக்குனர் அரசியல் தெளிவை வெளிப்படுத்தி உள்ளார். இளையராஜாவின் இசை சில இடங்களின் எடுபடாதது தோன்றுகிறது. அதை போல் சில காட்சிகள் ஆவணப்படம் போன்ற உணர்வை ஏற்படுத்துவதால் சற்று சலிப்பு ஏற்படுகிறது. எனினும் இந்த படத்தில் காதல் என்கிற உணர்வு சாதி, மதம், கலாச்சாரம், மொழி, நிறம் ,இனம் போன்ற எதையும் பார்த்து வருவதில்லை... காதலை பிரிக்க வேண்டாம் என்பதே இந்த படத்தின் மூலம் பா ரஞ்சித் சொல்லவரும் கருத்தாகும். மென்மையான காதல் அனுபவம் மற்றும் ஆழமான கருத்தோடும் அனைவரது நெஞ்சங்களிலும் மின்னும் நட்சத்திரமாக நகர்ந்து செல்கிறது இப்படம்.

Latest Videos

click me!