பிக்பாஸ் ரட்சிதாவின் முன்னாள் கணவர்... நடிகர் தினேஷ் அதிரடி கைது! அதிர வைக்கும் காரணம்!

Published : Nov 13, 2025, 05:49 PM IST

shocking Bigg Boss Fame Rachitha Ex Husband Actor Dinesh Arrested: ரட்சிதாவின் முன்னாள் கணவரும், சீரியல் நடிகருமான தினேஷ் பணமோசடி காரணமாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
15
விஜய் டிவி லவ் ஜோடி:

விஜய் டிவியில் ஒன்றாக இணைந்து நடித்து, பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் ரட்சிதா மற்றும் தினேஷ். கன்னட சீரியல் நடிகையான ரட்சிதா மஹாலக்ஷ்மி தமிழில் முதல் முதலில் நடித்த சீரியல் என்றால், அது விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' சீரியல் தான். கருப்பு நிற மேக்கப்பில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் தினேஷ் கோபால்சாமி.

25
சரவணன் மீனாட்சி:

இந்த சீரியலில் நடித்து கொண்டிக்கும் போதே, இருவரும் காதலிக்க துவங்கிய நிலையில், பின்னர் இருதரப்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் ரட்சிதா தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்தார். குறிப்பாக திருமணத்திற்கு பின்னர் ரட்சிதா நடித்த 'சரவணன் மீனாட்சி' தொடர் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.

35
ரட்சிதாவுடன் சேர்ந்து வாழ முயன்ற தினேஷ்:

இந்த நிலையில் தான் திரைப்பட வாய்ப்புக்காக ரட்சிதா பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். அப்போது தான் ரட்சிதா, தன்னுடைய கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருவது உறுதியானது. இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, தினேஷ் தன்னுடைய மனைவி ரட்சிதாவை சமாதானம் செய்ய முயற்சித்தார். தினேஷ் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டு ரட்சிதாவுடன் சேர்ந்து வாழ தயாராக இருந்த போதும் ரட்சிதா தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார்.

45
தினேஷ் மீது புகார்:

இவர்கள் இருவரின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இருவருமே நடிப்பில் தங்களின் திறமையை நிரூபிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் தான் நடிகர் தினேஷ் கோபால்சாமி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம், பணகுடியைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் தான் தினேஷ் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

55
வேலை வாங்கி தருவதாக மோசடி:

இந்த புகார் மனுவில், "தன்னுடைய மனைவிக்கு மின்வாரியத்தில் (TNEB) வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நடிகர் தினேஷ் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.3 லட்சம் பெற்றதாகவும்... ஆனால், அவர் வேலை வாங்கித் தரவில்லை. அதே போல் பணத்தைத் திரும்பக் கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். பணம் கேட்டு சென்றபோது, அந்த பெண்ணின் அப்பாவை தாக்கியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது பணகுடி போலீசார், தினேஷ் மீது வழக்குப் பதிவு செய்து தினேஷை விசாரித்து வந்தநிலையில்... இன்று அதிரடியாக அவரைக் கைது செய்துளளனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories