Rashmika Bold Comment Triggers Social Media: ராஷ்மிகா மந்தனா, ஆண்களுக்கு மாதவிடாய் வரவேண்டும் என சமீபத்தில் பேசிய விஷயம் இப்போ அவருக்கே ஃபேக் பயர் ஆகி உள்ளது.
கன்னட திரையுலகில் இருந்து, தெலுங்குக்கு தாவி, பின்னர் தமிழுக்கு வந்தவர் தான் ராஷ்மிகா மந்தனா. கார்த்திக்கு ஜோடியா 'சுல்தான்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இதை தொடர்ந்து, தளபதி விஜய்க்கு ஜோடியாக 'வாரிசு' படத்தில் நடித்தார். இவரை தமிழில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் தொடர்ந்து ஆர்வமாக இருந்தாலும், ராஷ்மிகா பாலிவுட் பக்கம் சென்று விட்டதால் ஓய்வில்லாமல் நடித்து வருகிறார்.
25
வசூல் பட நாயகி:
மேலும் நேஷ்னல் கிரஷ் என 2கே கிட்சால் கொண்டாப்படும், ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் அதிகம் வசூல் செய்த படங்களில் நடித்த ஹீரோயின்களில் டாப்பில் உள்ளார். குறிப்பாக இவர், ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்த 'அனிமல்' திரைப்படம் ரூ.900 கோடிக்கு மேல் வசூல் செய்தது, அதே போல் விக்கி கௌஷலுடன் நடித்த 'சாவா' திரைப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்த சிக்கந்தர் தோல்வியை தழுவினாலும், ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை செய்தது. மேலும் தெலுங்கில் இவர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த புஷ்பா திரைப்படம் ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
35
விஜய் தேவரகொண்டாவுடன் நிச்சயதார்த்தம்:
தற்போது தென்னிந்திய சினிமாவில் மட்டும் அல்ல பாலிவுட் திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா, தன்னுடைய காதலரும், நடிகருமான விஜய் தேவரகொண்டாவுடவை திருமணம் செய்து கொள்ள தயாராகி உள்ளார். கடந்த மாதம் இவர்கள் இருவரின் நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது. இந்த தகவலை இரு தரப்புமே இதுவரை உறுதி செய்யவில்லை என்றாலும், இருவருக்கும் நெருக்கனான சிலர் உறுதி செய்துள்ளனர்.
45
அடுத்த ஆண்டு திருமணம்:
திருமணத்திற்கு பின்னரும் ராஷ்மிகா தொடர்ந்து நடிக்கும் முடிவில் இருப்பதாகவே கூறப்படுகிறது. அதே போல் இவர்களின் திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளதாம். தற்போது கமிட் ஆகியுள்ள சில படங்களை திருமணத்திற்கும் நடித்து முடித்து கொடுப்பதில், ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவருமே ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
55
சர்ச்சை பேச்சு:
இந்த நிலையில் தான், ராஷ்மிகா வான்டடாக வாயை விட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது... ஆண்களுக்கு மாதவிடாய் இருக்க வேண்டும் என இவர் கூறியதை தொடர்ந்து, நெட்டிசன்கள் இவரை கண்டமேனிக்கு திட்டி தீர்த்து வருகிறார்கள். இதை தொடர்ந்து, தான் சொல்ல வந்த விஷயம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது ஆண்களுக்கு மாதவிடாய் ஒருமுறையாவது வந்தால், அதனால் ஏற்படும் கஷ்டங்களை அவர்களால் உணர முடியும் என்பதற்காகவே அப்படி சொன்னேன் என ராஷ்மிகா கூறியுள்ளார். ஆனால் நெட்டிசன்களோ, ஆண்கள் குடும்ப பொறுப்பு உள்ளிட்ட பல வலிகளை தாங்கிக்கொண்டு தான் வாழ்கிறோம். பெண்களின் வலியை எங்களாலும் உணர முடியும், என பதிலடி கொடுத்து வருகிறார்கள்.