இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து மூட்டையை கட்டப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?

Published : Nov 13, 2025, 03:00 PM IST

Bigg Boss tamil season 9 This week Elimination: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில், வெளியே செல்ல உள்ள போட்டியாளர் யார் என்பதை கணித்து கூறியுள்ளனர் நெட்டிசன்கள்.

PREV
15
சர்ச்சையில் பிக்பாஸ் சீசன் 9:

பிக்பாஸ் தமிழ் 8-ஆவது சீசனை விட, பிக்பாஸ் 9-ஆவது சீசன் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. போட்டியாளர்கள் தேர்வு சரி இல்லை என்கிற விவாதம் ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க... மற்றொருபுறம் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர், வேல்முருகன் மற்றும் அவரின் தொண்டர்கள் ஒன்று கூடி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக செட் அமைக்கப்பட்டுள்ள இடத்தின் அருகிலேயே, அமர்ந்து நிகழ்ச்சியை நிறுத்தவேண்டும் என போராட்டம் செய்து வருகிறார்கள்.

25
பிக்பாஸ் கலாச்சார சீரழிவா?

இதற்க்கு முக்கிய காரணம், இது குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சி என்பதை மறந்து உள்ளே இருக்கும் சிலர் 18+ கன்டென்ட் கொடுக்க துவங்கியதே. எனவே இந்த நிகழ்ச்சி தமிழர்களின் கலாச்சாரத்தை சீரழித்து வருவதாக கூறி கண்டன குரல் உயர்த்தி உள்ளனர். தற்போது லவ் கன்டென்ட் கொடுத்த சிலர் குறைந்த வாக்குகளின் அடைப்படையில் வெளியேற்றப்பட்டாலும், இன்னும் சில போட்டியாளர்களை பிக்பாஸ் ஏன் உள்ளே வைத்துள்ளார் என்பது பலரது கேள்வியாக இருந்து வருகிறது.

35
நாமினேஷனில் சிக்கிய 9 பேர்:

கடந்த வாரம், பிக்பாஸ் வீட்டில் இருந்து துஷார் மற்றும் பிரவீன் வெளியேற்றப்பட்டனர். இந்த வாரம் ரம்யா, சுபி, திவாகர், கானா வினோத், கனி, சாண்டரா, வியானா, உள்ளிட்ட மொத்தம் 9 போட்டியாளர்கள் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் யார் இந்த வாரம் குறைவான வாக்குகளுடன் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது என்கிற விவரம் வெளியாகியுள்ளது.

45
இந்த வாரம் வெளியேறும் நபர்:

அதன்படி, இந்த வாரம் ரம்யா தான் கடைசி இடத்தில் உள்ளார். ஆரம்பத்தில் ஓவராக குரலை உயர்த்தி, சண்டை கோழியாக வலம் வந்த ரம்யா... விஜய் சேதுபதியிடம் திட்டு வாங்கிய பின்னர், சேப் கேம் விளையாடி வருகிறார். கடந்த இரண்டு வாரமாக இவர் ஆள் இருக்கும் இடமே தெரியாமல் அடக்கி வாசித்து வருகிறார். எனவே இவரை வெளியே அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர்.

55
டபுள் எவிக்ஷனா:

ஒருவேளை கடந்த வாரம் போல், இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் இருந்தால் சுபியும் வெளியேற வாய்ப்புள்ளது. இந்த வாரம் ரம்யா மட்டும் வெளியேறுவாரா... கூடவே சுபியும் செல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories