Balakrishna Says No to Rajinikanth Jailer 2 movie: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்த போதும், அதை பிரபல நடிகர் நிராகரித்து விட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் தான் ரஜினிகாந்த். இவருக்கு தென்னிந்திய திரையுலகில் மட்டும் அல்ல, உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 70 வயசை எட்டி இருந்தாலும்... இப்போது வரை குறையாத இவருடைய ஸ்டைல் தான் இவரின் தனி சிறப்பு. அதே போல் 150 கோடி வரை சம்பளம் வாங்கினாலும், இவருடைய எளிமை பலரையும் பிரமிக்க செய்யும் ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. இதற்க்கு மிகப்பெரிய உதாரணம் என்றால் "சமீபத்தில் இமயமலை சென்றபோது, ரோட்டு கடையில் இவர் உணவு வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்ததை சொல்லலாம்".
25
ஏமாற்றிய கூலி:
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'கூலி' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி, எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் போனது. எப்போதும் கதையை செதுக்க கூடிய லோகேஷ் இந்த முறை கோட்டை விட்டுவிட்டதாகவே பார்க்கப்பட்டது. காரணம் பல இடங்களில் இந்த படத்தின் கதை மற்றும் வசனங்கள் ரசிகர்களுக்கு புரியவில்லை என்பதே.
35
ஜெயிலர் முதல் பாகத்தின் வெற்றி:
கூலி கைகொடுக்காமல் போனதால், தற்போது ரஜினிகாந்த் நம்பி இருக்கும் அடுத்த திரைப்படம், இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்து வரும் 'ஜெயிலர் 2'. கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தின் முதல் பாகத்தில், ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க, மகனாக வசந்த் ரவி நடிக்க, மருமகள் கதாபாத்திரத்தில் மிர்ணா நடித்திருந்தார். மேலும் மோகன் லால், சிவராஜ் குமார், மாரி முத்து, விநாயகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
45
ஜெயிலர் 2:
இந்த படம் ரிலீஸ் ஆகி ரூ.650 கோடி வசூல் சாதனை படைத்தது. எனவே இதன் இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. 80 சதவீதத்திற்கும் மேல் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் ஒட்டு மொத்த ஷூட்டிங்கையும் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க மறுத்த முக்கிய பிரபலம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
55
ரஜினியுடன் நடிக்க மறுத்த பாலகிருஷ்ணா:
அதாவது, கடந்த 2 மாதங்களுக்கு முன்னரே 'ஜெயிலர் 2' படத்தில் தெலுங்கு திரையுலகின் ஆக்ஷன் மன்னன் பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் ரஜினிகாந்துடன் 'ஜெயிலர் 2' படத்தில் நடிக்கும் வாய்ப்பை பாலகிருஷ்ணா நிராகரித்து விட்டாராம். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. இவருக்கு கோடிகளில் சம்பளம் கொடுக்க படக்குழு தயாராக இருந்த போதும் இந்த வாய்ப்பை இவர் நிராகரித்ததன் பின்னணி என்ன? என்பது பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.