இந்த லிஸ்டில் முதலிடத்தில் இருப்பது மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர் தான். இந்த சீரியலின் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது பாகம் கடந்த 2023-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த தொடர் உறவு, காதல், கூட்டுக்குடும்பம் என ஜனரஞ்சகமான கதை களத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஸ்டாலின் முத்து கதையின் நாயகனாகவும், நிரோஷா அவருக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். 2 பெண் பிள்ளைகள் மற்றும் 3 ஆண் பிள்ளைகளை பெற்ற தாய் தந்தையின் அன்பின் அடையாளமாக இந்த தொடர் உள்ளது. அதே போல் இந்த சீரியலில் 3 மருமகள்களுக்கு மாமியாராக நடித்து வரும் நிரோஷாவை பார்த்து நமக்கு இப்படி ஒரு மாமியார் இல்லையே என கவலை படும் மருமகள்களும் உள்ளது. அந்த அளவுக்கு பலரின் மனதையும் இந்த தொடர் கவர்ந்துள்ளது. இந்த சீரியல் தான் விஜய் டிவியில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறதாம்.