பிக்பாஸ் முதல் சீசனுக்கு பிறகு, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது என்றால் அது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தான். மிகவும் பிரபலமான வெள்ளித்திரை நடிகர் - நடிகைகள் இந்த போட்டியில் கலந்து கொள்ள வில்லை என்றாலும், சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர்கள், நடன இயக்குனர்கள், சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமான பலர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு, மிகவும் புதுமையான டாஸ்க்கள் கொடுத்து நிகழ்ச்சியை கலகலப்பாக்கி உள்ளனர் பிக்பாஸ் குழுவினர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து திடீரென முக்கிய போட்டியாளரான ஆயிஷா வெளியேற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவருக்கு தற்போது மூச்சு திணறல் ஏற்பட்டு பின்னர் அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே ஒருமுறை மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் அவதியுற்ற நிலையில் மற்ற போட்டியாளர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மருத்துவ குழுவினர் வந்து சிகிச்சை கொடுத்தனர். தொடர்ந்து அடுத்தடுத்து இவருக்கு உடல் நலமின்றி போவதால், அவர் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.