தீபாவளி என்றாலே புதுப்படங்கள் ரிலீசாவது வழக்கம். அதிலும் நிச்சயம் அஜித், விஜய், ரஜினி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ஏதாவது ஒன்று ரிலீசாகிவிடும். ஆனால் இந்த வருட தீபாவளி சற்று வித்தியாசமானதாக அமைந்துள்ளது. ஏனெனில் மேற்கண்ட முன்னணி நடிகர்களின் படங்கள் ஒன்று கூட இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாகவில்லை.
அவர்களுக்கு பதிலாக தற்போது தமிழ் சினிமாவில் வெற்றிநடைபோட்டு கொண்டிருக்கும் நடிகர்களான சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தி ஆகியோரின் திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்ள உள்ளனர். அதன்படி சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படமும் கார்த்தி நடித்துள்ள சர்தார் படமும் வருகிற அக்டோபர் 21-ந் தேதி ரிலீசாக உள்ளது.