கீர்த்தி சுரேஷுடன் எடுத்து கொண்ட ஸ்டைலிஷ் போடோஸை வெளியிட்டு... புகழ்ந்து தள்ளிய 'பாண்டியன் ஸ்டோர்' கதிர்!

First Published | Oct 19, 2022, 1:03 PM IST

'பாண்டியன் ஸ்டோர்' சீரியல் நடிகர் குமரன், நடிகை கீர்த்தி சுரேஷுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அவரை புகழ்ந்து தள்ளியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளவர் கீர்த்தி சுரேஷ். மிகக்குறுகிய காலத்தில் விஜய், ரஜினிகாந்த், விக்ரம், என முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மேலும் நடிகை நயன்தாராவை பின்பற்றி, தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் நேற்று முன் தினம் தன்னுடைய 30 ஆவது பிறந்த நாளை மிக பிரம்மாண்டமாக கொண்டாடி மகிழ்ந்தார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் பிறந்தநாள் அன்று இவர், எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டது.

மேலும் செய்திகள்: ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சந்திரமுகி சுவர்ணா! உடல் மெலிந்து இப்படி ஆகிட்டாங்களே.. ஷாக்கிங் போட்டோஸ்!
 

Tap to resize

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் கதிர் என்ற வேடத்தில் நடித்து வரும் குமரன், நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியுள்ளதாவது,  "நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி. அன்று போலவே இன்றும்... மிகவும் இளமையாகவும், அழகாகவும் இருக்கிறீர்கள் என தெரிவித்துள்ளார்". மேலும் இவர் கீர்த்தி சுரேஷ் உடைக்கு மேட்சிங்காக ஸ்டைலிஷான கோட் சூட்டில் சுமார் ஜம்முனு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களுடைய லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 மேலும் செய்திகள்: 71 வயது நடிகருக்கு ஹீரோயினாகும் ஜோதிகா..! பிறந்தநாளில் வெளியானது படத்தின் டைட்டில்..!
 

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் சமூக வலைதளத்தில் படு ஆக்டிவாக இருக்கும் இவர், சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!